திருப்பூர் மாவட்டம் முதலிடம்-மாணவிகள் அதிகம்
சென்னை, ஜூலை 16- பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 16 வியாழனன்று வெளியிடப்பட்டன.இதில் தேர்வு எழுதியவர்களில் 92.3 சதவீதம் பேர் தேர்ச்சி யடைந்துள்ளனர். மாணவியர்களே அதிகளவில் தேர்ச்சிபெற்றுள்ளனர். இதில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்புத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 7 லட்சத்து 79 ஆயிரத்து 931 மாணவ,மாணவியர்கள் எழு தினர். பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 16 வியாழனன்று இணையதளத்தில் வெளியிடப் பட்டது. தேர்வு முடிவுகள் http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டன.
பொதுத்தேர்வில் 92.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 94.80 சதவீதம் மாணவிகள், 89.41 சதவீதம் மாணவர்கள் ஆவர். மாணவர்களை விட மாணவிகள் 5.3 சதவீதம் கூடுதலாக தேர்ச்சியடைந்துள்ளனர். மாண விகள் 4 லட்சத்து 24 ஆயிரத்து 285 பேரும், மாணவர்கள் 3 லட்சத்து 55 ஆயிரத்து 646 பேரும் தேர்வு எழுதினர். தேர்வு எழுதியவர்களில் 92.3 சத வீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.ஜூலை 27 ஆம் தேதி தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் மொத்தமாக பின்னர் அறிவிக்கப்படும். இதில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்று ள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 97.12 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாவது இடம் ஈரோடு மாவட்டம் 96.99 சத வீத தேர்ச்சி, மூன்றாவது இடம் கோவை மாவட் டம் 96.39 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளது.அதிக பட்சமாக கணினி பாடப்பிரிவில் 99.51 சதவீதம் பேரும், கணிதப் பாடப்பிரிவில் 96.31 சதவீதம் பேரும், உயிரியல் பாடப் பிரிவில் 96.14 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.
மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். விடைத்தாள் மதிப்பெண் மறுகூட்டலுக்கு பள்ளிகள் வழி யாக விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதி, வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும்.
செல்போனில் மதிப்பெண் விபரம்
முன்னதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மார்ச் 2020-ல் நடைபெற்ற மேல் நிலை இரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு கள் மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு மார்ச் / ஜூன் பருவத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாட ங்களை 2020 பருவத்தில் எழுதிய மாணவர் களின் தேர்வு முடிவுகள் இன்று (வியாழன்) இணையத்தில் வெளியிடப்படும். மாணவர் களின் செல்போனுக்கும் குறுஞ்செய்தியாக மதிப் பெண்கள் விவரம் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதாதவர்களுக்கு ஜூலை 27-ல் வாய்ப்பு
ஈரோட்டில் வியாழனன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தி யாளர்களிடம் கூறுகையில், அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் 8 லட்சத்து க்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. பெற்றோர், மாண வர்கள் என எல்லோரின் வேண்டுகோளையும் ஏற்று, பள்ளிக் கல்வித்துறை இன்று தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் இறுதித் தேர்வை 34,842 மாணவர்கள் எழுதவில்லை. தேர்வை எழுதாத மாணவர்கள் அதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை. முதல்வரின் ஆணைப்படி அவர்கள் அனைவரும் பொது த்தேர்வை எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எல்லோரின் தேர்வு முடிவுகளும் விரைந்து வெளி யிடப்படும். பிளஸ் 2 இறுதித் தேர்வு எழுதாதவர் களுக்கு ஜூலை 27 ஆம் தேதி மறுதேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
துணைத்தேர்வுக்கு பின்னர் தேதி அறிவிப்பு
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத தேர்வர்கள், துணைத் தேர்வுக்கு விண்ண ப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க வேண் டிய தேதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரி வித்துள்ளது. இதுதொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக்க கம் ஜூலை 16 அன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளி/ தேர்வெழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் வழியாக இணையதளத்தில் பதி விறக்கம் செய்யப்பட்ட தங்களது மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை, விடைத் தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேதி மற்றும் வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும். அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிக்கும் நாட்களில், தேர்வர்கள் தங்களது விடைத்தா ளின் நகலினை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளான வேதி யியல், கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் (புதிய பாடத்திட்டம் மற்றும் பழைய பாடத்திட்டம்) பாடத் தேர்வுகளை எழுத முடியாத தேர்வர்களுக்கு, அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்கள் மட்டும் தற்போது வெளியிடப்படும். வரும் 27 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள 12 ஆம் வகுப்பு மறு தேர்வினை எழுதும் தேர்வர்களுக்கு மட்டும், மறுதேர்வு முடிவடைந்த பின், தேர்வெழுதிய அனைத்து பாடங்களுக்குமான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத தேர் வர்கள், துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய தேதி கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.