tamilnadu

img

ஜன.31-ல் புதுக்கோட்டை வாசிக்கிறது

லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை, ஜன.13- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் 4-ஆவது புதுக்கோட்டை புத்த கத் திருவிழாவில் லட்சம் மாணவர்கள் பங்கேற்கும் புதுக்கோட்டை வாசிக்கி றது இயக்கம் ஜனவரி 31-ல் நடை பெறுகிறது. அறிவியல் இயக்கத்தின் புதுக் கோட்டை மாவட்டச் செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் க.சதா சிவம் தலைமையில் புதுக்கோட்டை யில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற் றது. மாவட்டச் செயலாளர் மு.முத்துக் குமார் வேலை அறிக்கை வாசித்தார். மாநில பொதுச் செயலாளர் எஸ்.சுப்பி ரமணியன், பொருளாளர் ஆர்.ஜீவா னந்தம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார், புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் நா.முத்துநில வன், அ.மணவாளன், எம்.வீரமுத்து உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். 4-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை மாவட்டத்தின் கடைக் கோடிக் கிராமங்களிலிருந்தும் வாச கர்கள், பொதுமக்கள் பங்கெடுக்கும் வகையில் விரிவான அளவிற்கு திட்ட மிட்டு நடத்துவது. பள்ளிக் கல்வித்துறை மற்றும் கல்லூரரி நிர்வாகத்தின் ஒத்து ழைப்புடன்  லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் வகையில் ஜனவரி 31-ல் புதுக்கோட்டை வாசிப்பு இயக்கத்தை நடத்துவது. இதில் குறிப்பிட்ட பாட வேலையில் கதை, கவிதை, கட்டுரைப் புத்தங்களை மாணவ, மாணவிகளை வாசிக்கச் செய்வது எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், தொல்லியல் துறையின் ஒத்துழைப்போடு புதுத்தகத் திருவிழா வில் கீழடி காட்சி அரங்கம் அமைப்பது, சிறந்த சிறுகதை, நாவல், கவிதை நூல்களுக்கு விருதுகள் வழங்குவ தோடு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது,  காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விஞ்ஞா னிகளோடு கலந்துரையாடல் நிகழ்ச்சி களை நடத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாவட்டக்குழுவில் ராசி.பன்னீர் செல்வத்திக் கல்விப்பணியையும் முனைவர் பட்டம் பெற்ற அறிவி யல் இயக்கப் பொறுப்பாளர் ரெ.பிச்சை முத்து ஆகியோரையும் பொதுச் செய லாளர் எஸ்.சுப்பிரமணியன் நினைவுப் பரிவு வழங்கி பாராட்டினார். அறிவியல் இயக்க நிர்வாகிகள் லெ.பிரபாகரன், டி.சிவராமகிருஷ்ணன், ராசி.பன்னீர் செல்வன், சி.சேதுராமன், மா.கும ரேசன், கா.ஜெயபாலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட துணைத் தலைவர் ம.வீர முத்து வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் கே.ஜெயராம் நன்றி கூறி னார்.
 

;