உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை குடும்பத்தினர் அரசுக்கு கோ
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், திருச்சிற்றம்பலம் அருகே உள்ள களத்தூர் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல், மாசிலாமணி தம்பதியரின் மகன் வ. ராமச்சந்திரன் ( வயது 50 ) இவர் காஷ்மீரில் ( 117 வது பட்டாலியன் படை பிரிவு ) ராணுவ வீரராக பணியாற்றி வந்தார்.
இந் நிலையில் இவர் கடந்த 30 03.2020 அன்று பணியில் இருக்கும் போது மாரடைப்பால் மரணமடைந்தார். இது பற்றிய தகவல் அவரது குடும்பத்தினருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பீதியைத் தொடர்ந்து நாடெங்கும் தற்சமயம் ஊரடங்கு அமலில் உள்ளதால், இறந்த ராணுவ வீரரின் உடலை ஊருக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால். அவரது குடும்பத்தினர் பெரும் பரிதவிப்பில் உள்ளனர்.
இறந்த ராணுவ வீரர் இராமச்சந்திரணுக்கு சீத்தாலெட்சுமி என்ற மனைவியும் 1 மகனும் 1 மகளும் உள்ளனர். இராணுவ வீரர் உடலை உடனடியாக சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் மற்றும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடும்பத்தினரும் களத்தூர் கிராம மக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்