tamilnadu

img

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு வாய்ப்பு? வானிலை மையம் தகவல்

சென்னை, ஆக.4- வட கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், எனவே தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனத்தால் தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழைக்கான வாய்ப்பு குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 3 செ. மீட்டரும், சாத்தான்குளம் மற்றும் நீலகிரி மாவட்டம் ஜி பஜாரில் 2 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

;