ராஞ்சி,ஜூன் 2- ஜார்க்கண்டில் பாதுகாப்புப் படையினர் மற்றும் நக்சல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியானார்.ஜார்க்கண்டின் தும்கா பகுதியில் ஞாயிறன்று அதிகாலையில் மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. இதில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 வீரர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 5 நக்சல்களை தேடிவருகின்றனர். காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.