tamilnadu

img

வேளாண் அலுவலர் வடிவமைத்த நவீன களையெடுப்பு எந்திரம்

வாலாஜா:
வயலில் களையெடுக்க புதிய எந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, வேளாண்மை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையைச் சேர்ந்த உதவி வேளாண்மை அலுவலர் எஸ்.நாகராஜன் கூறியதாவது:-

நேரடி நெல் விதைப்பு கருவியில் உள்ள துளைகள் வரிசைக்கு வரிசை 20 செ.மீட்டர் அளவில் உள்ளது. இந்தக் கருவியில் நெல் விதைகளை இட்டு வயலில் விதைக்கும்போது வரிசைக்கு வரிசை 15 செ.மீட்டர் அளவில் விதைகள் விழுந்து முளைக்கின்றன. முளைத்த பயிர்களின் இலைகள் வளர்ந்து 5 முதல் 8 செ.மீட்டர் அளவில் வளர்ந்து இலைகள் ஒன்றோடு ஒன்று பிணைந்து கொள்கின்றன.களையெடுக்க கூலி ஆட்கள் வைக்கும்போது அதிகம் செலவாகிறது. எனவே எந்திர களையெடுப்பான்களை வைத்து களையெடுக்கும்போது பயிர்கள் சேதமடைகின்றன. கோனாவீடர் கருவியை கொண்டு களையெடுக்கும்போது, அவற்றை இயக்க போதுமான கூலி ஆட்கள் கிடைப்பதில்லை. நேரமும் அதிகமாகிறது. இந்தப் புதிய பவர் கோனாவீடர் எந்திரத்தை வைத்து களையெடுக்கும்போது ஒரு ஏக்கரில் 3 மணி நேரத்தில் களையெடுக்கலாம். இதை, இயக்குவதற்கு 2 லிட்டர் பெட்ரோல் போதுமானதாகும்.நெல் தவிர வரிசையில் விதைத்து சாகுபடி செய்கிற அனைத்துப் பயிர்களிலும் இந்தக் கருவியை கொண்டு களையெடுக்கலாம். இவை தவிர கத்திரி, தக்காளி, வெண்டை, மிளகாய், நிலக்கடலை மற்றும் பல பயிர்களில் வரிசைக்கு வரிசை, செடிக்கு செடி அருகில் உள்ள களைகளை மல்டி கிராப் பவர் வீடரை கொண்டு களையெடுக்கலாம். பயிர்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாத வகையில் எந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்

;