காட்பாடி, ஏப்.27- கல்லூரி விடுமுறை மற்றும் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவினால் ஆகிய ஏற்பட்டுள்ள குருதி பற்றாக் குறையால் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனை வேண்டுகோ ளுக்கிணங்க இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் லத்தேரியில் ரத்த தானம் செய்தனர்.
சங்கத்தின் காட்பாடி தாலுகா செயலாளர் சுட ரொளியன் தலைமை யில் நடைபெற்ற முகாமில் 48 பேர் ரத்த தானம் வழங்கி னர். மருத்துவர் பி.பாஸ்கரன், இரத்த வங்கி அலுவலர் நந்தகுமார், தாலுகா தலை வர் சத்யானந்தன் தாலுக்கா நிர்வாகிகள் சங்கர், துர்கா, தேவி, சதீஷ், பகத்சிங், பழனி, வெங்கடேஷ், மீரா உட்பட பலர் பங்கேற்றனர்.