tamilnadu

img

மதுரை மக்களவை உறுப்பினர் ரேசன் கடையில் ஆய்வு

மதுரை மாநகராட்சி 100 ஆவது வார்டு பைக்கரா பகுதியில் ரேசன் பொருட்கள் தரமற்று கிடைக்கின்றன என்று வந்த தகவல்களைத் தொடர்ந்து மதுரை மக்களவை உறுப்பினர்  சு.வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதி மக்களிடம்  ரேஷன் கடைகளில்  வாங்கும்  பொருட்களின் தரம்  குறித்து விபரங்களை பெற்றுக்கொண்டார். அதேபோல் மாமதுரை அன்னவாசல் திட்டத்தின் கீழ் மதுரையில் உள்ள  ஆதரவற்றவர்களுக்கு மேலப்பொன்னகரம் பகுதியில் சமைக்கப்படும் உணவுகூட பகுதியை ஆய்வு செய்து அங்குள்ள உணவினை சுவைத்துப் பார்த்தார்.

;