tamilnadu

img

தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக கூறிய ரஜினியிடம் தேவைப்பட்டால் விசாரணை

சென்னை,ஆக.31- தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாகக் கூறிய நடிகர் ரஜினியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்த வாய்ப் புள்ளதாக ஒருநபர் விசாரணை ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் தெரி வித்தார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது காவல்துறை யினர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணை யம் விசாரணை நடத்தி வருகிறது. ஆணையத்தின் 14வது கட்ட விசாரணை யின் முடிவில் 379 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 555 ஆவணங்களை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அமைப்புகள் மற்றும் ரிட் மனு தாக்கல் செய்தவர்களிடம் விசாரணை நடத்த உள்ளது.  இந்நிலையில்  துப்பாக்கிச் சூடு சம்ப வத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த், தூத் துக்குடியில் சமூக விரோதிகள் ஊடுருவியி ருப்பதாக சென்னையில் செய்தியாளர்களி டம் கூறினார்.  இந்நிலையில், தேவை ஏற்பட்டால், தூத்துக்குடியில் சமூக விரோதிகள் ஊடுருவி இருப்பதாக தெரிவித்த நடிகர் ரஜினிகாந்தி டமும் விசாரணை நடத்தப்படும் என்று ஒருநபர் விசாரணை ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் தெரிவித்துள்ளார்.