tamilnadu

img

வாக்குசீட்டு பெட்டியை தூக்கிச் சென்ற ஆளுங்கட்சியினர்?

திமுகவினர் சாலை மறியல்

தஞ்சாவூர், ஜூன் 22-  தஞ்சை கூட்டுறவு வங்கி தேர்த லின் போது வாக்குச்சீட்டு பெட்டியை ஆளுங்கட்சியினர் தூக்கிச் சென்றதாக கூறி திமுகவினர் சாலை மறியலில் ஈடு பட்டனர்.            தஞ்சாவூர் அருகே கரந்தையில், கருத்தட்டாங்குடி திராவிட கூட்டுறவு நகர வங்கி உள்ளது. இந்த வங்கியில் தலைவர், செயலாளர் மற்றும் நிர்வா கக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, 11 பதவிகளுக்கான தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதில், 2 இயக்குநர்கள் பேட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 9 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற இருந்தது.  ஆனால் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலால் கூட்டு றவு வங்கி தேர்தல் தள்ளி வைக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் முடிந்த நிலையில், சனிக்கிழமை காலை கரந்தை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், கூட்டுறவு வங்கி தேர்தல்  நடைபெற இருந்தது.  

இதில் அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 29 பேர் போட்டியிட்டனர். தேர்தல் அதிகாரி ராமச்சந்திரன் தலைமையில் அதி காரிகள் தேர்தல் பணிகளை மேற்கொண் டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த வாக்குச்சீட்டுகள் வைக்கப்பட்டிருந்த பெட்டியை வாலிபர் ஒருவர் தூக்கிக் கொண்டு ஓடிவிட்டார்.  இது குறித்து தகவலறிந்த திமுக எம்.எல்.ஏ. டி.கே.ஜி.நீலமேகம் தலைமை யிலான, நூற்றுக்கும் மேற்பட்டோர், வாக்கு சீட்டு பெட்டியை ஆளும்கட்சி யினர்தான் தூக்கிச் சென்று இருப்பார் கள் எனக்கூறி, சாலை மறியலில் ஈடு பட்டனர். மேலும் வாக்குச்சீட்டு பெட்டி யை தூக்கிச் சென்ற தகவல் மற்ற கட்சி யினருக்கு கிடைத்ததையடுத்து, அங்கு அதிமுக, அமமுக கட்சியை சேர்ந்த ஏரா ளமானோர் குவிந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி. ரவிச்சந்தி ரன், தஞ்சை கிழக்கு காவல்துறை மற்றும் எஸ்.பி.தனிப்பிரிவு காவலர்கள் உள் ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் குவிந்த னர்.  அவர்கள் மறியலில் ஈடுபட்ட தி.மு.கவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வாக்குச்சீட்டு பெட்டியை தூக்கி சென்ற வரை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக  உறுதியளித்ததையடுத்து சாலை மறி யல் கைவிடப்பட்டது. மேலும், இந்த பிரச்சனைகளால் கூட்டுறவு வங்கி தேர்தல் நிறுத்தப்பட்டு வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொட ர்ந்து அங்கு ஏராளமான காவலர்கள் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.