tamilnadu

img

கல்வியை காவிமயம், வணிகமயம் ஆக்காதே: மாணவர்கள் ஆவேச போராட்டம்

சென்னை,ஆக.19- ஏழை எளிய மாணவர்கள் கல்வி பெறுவதை தடுத்து, கல்வி யை காவிமயமாகவும் வணிகமய மாகவும் ஆக்கும் வகையில் புதிய தேசிய கல்விக்கொள்கையை கொண்டுவந்துள்ள மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் புதிய கல்விக்கொள்கையை திரும்பப் பெறக்கோரியும் மாணவர்களை பலிவாங்கும் நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும். மாணவியின் மரணத்திற்கு நீதிவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி  இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெரு மன்றம், அனைத்திந்திய ஜனநாயக மாணவர் சங்கம் ஆகியவற்றின் சார்பில்  ஆகஸ்ட் 19 வியாழனன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஈரோட்டில்  மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மாவட்ட செயலாளர் கோபி கிரு ஷ்ணன், தலைவர் வினிஷா ஆகி யோர் பங்கேற்றனர். திருப்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவர் பெருமன்ற மாநிலச் செயலாளர் தினேஷ், மாணவர் சங்க மாநிலத் துணைச் செயலாளர் நிருபன், மாவட்டச் செயலாளர் சம்சீர் ஆகியோர்  பங்கேற்றனர்.  சேலத்தில் நடைபெற்ற போராட்டத்தில்  மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் பங்கேற்றார்.திருவாரூரில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளர் பிரகாஷ், மாவட்டச் செயலாளர் சுர்ஜித், தலைவர் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். தென்சென்னை மாவட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சந்துரு தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  மாநிலம் முழுவதும் 25 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.