சிஐடியு, விச, விதொச ஆவேசம்
கோவை, ஆக.10- விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் அத்தியாவசிய பொருள் சட்டத்தை திருத்துவது மற்றும் விவசாயிகளின் இலவச மின்சார உரிமையை பறிக்கும் நடவடிக்கையை கண்டித்து நாடு முழுவதும் சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாய தொழி லாளர்கள் சங்கத்தினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளை கடுமையாக பாதிக் கும் அவசரச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். பொதுமுடக்க கால நிவார ணமாக அனைத்து குடும்பங்களுக்கும் மத்திய அரசு ரூ.7,500ம், மாநில அரசு ரூ.5 ஆயிரம் வீதம் ஆறு மாதங்களுக்கு வழங்க வேண்டும். நூறுநாள் வேலை திட்ட காலத்தை அதிகப்படுத்தி, அதனை நகரப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். விவசாய நிலங்களில் உயரழுத்த மின் கோபுரங் கள் நிறுவ உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங் களை தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்க ளன்று நாடு முழுவதும் சிஐடியு, தமிழ் நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சூலூர், பொள்ளாச்சி, ஆனைமலை, பெரியநாயக்கன் பாளையம், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், அன்னூர், தொண்டாமுத்தூர், மதுக்கரை, கிணத் துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் நடை பெற்ற ஆர்ப்பாட்டங்களில் சிஐடியு கோவை மாவட்ட தலைவர் சி.பத்ம நாபன், மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ் ணமூர்த்தி, பெருமாள், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.பி.இளங்கோவன், செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, பொருளாளர் தங்கவேல், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சு.துரைசாமி, பொது செயலாளர் செல்வராஜ், பொருளாளர் பெருமாள் மற்றும் சிஐடியு, விச, விதொச நிர்வாகிகள் திரளானோர் பங் கேற்றனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம், காங்கயம், திருப்பூர் மார்க்கெட், அவிநாசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு), தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கம் ஆகிய மூன்று சங்கங் களின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங் களை எழுப்பினர்.
சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கம், சங்ககிரி, கொங்கணாபுரம், வாழப்பாடி, ஓமலூர், மேச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடை பெற்ற ஆர்ப்பாட்டங்களில் விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் டி.ரவீந் தரன், மாவட்ட செயலாளர் ஏ.ராம மூர்த்தி, மாவட்ட பொருளாளர் அன்பழ கன், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜி.கணபதி, மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், சிஐடியு மாவட்ட செயலாளர் டி.உதய குமார், மாநில குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, சிபிஎம் மாவட்ட செய லாளர் பி.ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டம் அந்தியூர், பெருந் துறை, பவானி, கோபிசெட்டிபாளை யம், சத்தியமங்கலம், நம்பியூர், சென்னி மலை, மொடக்குறிச்சி, சிவகிரி, ஊஞ்ச லூர், நசியனூர், புளியம்பட்டி, கடம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் தமிழ் ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.எம்.முனுசாமி, சிஐடியு சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் பொன்பாரதி, விவசாயிகள் சஙக மாவட்டக்குழு உறுப்பினர் வி.கே.ஆறுமுகம், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சி.துரைசாமி, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.சம்பூரணம், சிஐடியு மாவட்ட உதவிச் செயலாளர் கே.மோகன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரி
தருமபுரி தொலைபேசி நிலையம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம் பள்ளி, பென்னாகரம் உள்ளிட்ட பல் வேறு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில செயலாளர் சி.நாகராசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கே.என்.மல்லையன், மாவட்ட செய லாளர் சோ.அருச்சுணன், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வி.ரவி, மாவட்ட செயலாளர் எம்.முத்து, சிஐடியு மாவட்ட தலைவர் பி.ஜீவா, பொருளாளர் ஏ.தெய்வானை, சிபிஎம் மாவட்ட செயலாளர் ஏ.குமார் மற்றும் சிஐடியு, விச, விதொச நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் கே.சுந்தரம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் என்.வாசு, செயலாளர் ஏ.யோகண்ணன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாவட்ட செய லாளர் வி.ஏ.பாஸ்கரன் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.