tamilnadu

img

கொரோனா பாதிப்பு... மாவட்ட நிலவரம்... 

சென்னை
மாநிலத்தின் இன்றைய கொரோனா பாதிப்பில் சென்னை வழக்கம் போல முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 1,243 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 83,337 ஆக அதிகரித்துள்ளது. மேலும்  இன்று (வெள்ளி) ஒரே நாளில் அங்கு 36 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,376 ஆக உயர்ந்துள்ளது.

சென்னைக்கு அடுத்து மதுரையில் 263 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூரில் 220 பேரும், விருதுநகரில் 196 பேரும், தூத்துக்குடியில் 189 பேரும், வேலூரில் 183 பேரும், தேனியில் 175 பேரும், திண்டுக்கல்லில் 160 பேரும், கன்னியாகுமரியில் 149 பேரும், திருவண்ணாமலையில்  145 பேரும், கோவையில் 141 பேரும், செங்கல்பட்டில் 124 பேரும், தஞ்சாவூரில் 117 பேரும், நெல்லையில் 115 பேரும், காஞ்சிபுரத்தில் 110 பேரும், விழுப்புரத்தில் 105 பேரும், திருச்சியில் 100 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மற்ற மாவட்டங்களில் இன்று (வெள்ளி) 100-க்குள் தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாம்பரம் மண்டலத்தை பெற்றுள்ள செங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை கடந்துள்ளது

;