சென்னை ஆவடி மூன்று நகர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பி னராகவும், மாதர் சங்கத்தின் முன்னணி ஊழியராகவும் செயல்பட்ட தோழர் ரஞ்ஜிதம் (87) வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் காலமானார். உயிரிழந்த ரஞ்சிதம் கணவர் மறைந்த தோழர் தட்சிணாமூர்தி 3 மகன்கள் மூன்று நகர் பகுதி மக்களின் குடி உரிமைக்காக மக்களை திரட்டி போராடியதில் முன்னணி பாத்திரம் வகித்தவர்கள். ஆவடி பகுதியிலிருந்து குடிமனை அபகரிக்க வந்த ரவுடிகளை எதிர்த்து நின்றதில் முன்னணியில் நின்ற குடும்பங்களில் ஒன்று.
அவருடைய ஓலை குடிசையே போரட்ட களத்தின் மையமாகத் திகழ்ந்தது. குடிமனை பிரச்சினை, சாலை , மின் இணைப்பு, நியாய விலைக் கடை உள்ளிட்ட அடிப்படை பிரச்சனை களுக்காகவும் மக்களுடன் இணைந்து போராடியவர். 1987ஆம் ஆண்டில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக அம்பத்தூர் ஆவடி மட்டுமல்ல சென்னையில் நடைபெற்ற அனைத்து இயக்கங்களிலும் முழுமையாக பங்கெடுத்தவர். அவரது உடலுக்கு மாவட்டக் குழு உறுப்பினர்கள் சி.சுந்தர்ராஜ், ம.பூபாலன், ஆர்.ராஜன் உள்ளிட்ட உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் வெள்ளிக்கிழமை மாலை திருமுல்லைவாயலில் உள்ள மயானத்தில் எரியூட்டப்பட்டது.