மும்பை, மார்ச் 6 - அவுரங்காபாத்தில் உள்ள விமான நிலை யத்திற்கு ‘சத்ரபதி சம்பாஜி மகராஜ் விமான நிலையம்’ என்று மறு பெயரிட மகாராஷ்டிரா அரசு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. சம்பாஜி, மராட்டிய மன் னர் சத்ரபதி சிவாஜியின் மகன் ஆவார். ஏற்கென வே, மும்பை விமான நிலையத்திற்கு சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமான நிலையம் என் றும், கோலாப்பூர் விமான நிலையத்திற்கு சத்ரபதி ராஜராம் மகராஜ் பெய ரிடப்பட்டு உள்ளது குறிப் பிடத்தக்கது.