tamilnadu

img

உள்ளாட்சி தேர்தலுக்கு 92 ஆயிரம் வாக்குச்சாவடிகள்

சென்னை,ஆக.12- உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழகம் முழு வதும் 92 ஆயிரம் வாக்குச்சாவடிகள் கண்டறி யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான மாநில மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கடந்த மாதம் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து  உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டி யல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகின்  றன. பணிகள் நிறைவடைந்ததும் அக்டோபர்  மாதத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்ப டும் என தகவல்கள் வெளியானது. இதற்காக வாக்குச்சாவடிகள் கண்டறி யப்பட்டு வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு கருத்துகள் கேட்கப்பட்டதோடு அனைத்து கட்சி ஆலோ சனை கூட்டமும் நடைபெற்றது. இந்நிலை யில் உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் தற்போது இறுதி வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டுள்ளன. அதன்படி சென்னை உள்ளிட்ட 15 மாநக ராட்சிகளில் 12 ஆயிரத்து 679 வாக்குச்சாவடி கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. 121 நக ராட்சிகளில் 7 ஆயிரத்து 386 வாக்குச்சாவடி கள் அமைக்கப்பட்டுள்ளன. 528 பேரூராட்சிகளில் 9 ஆயிரத்து 288  வாக்குச்சாவடிகளும், 12 ஆயிரத்து 524 கிராம  ஊராட்சிகளில் 63 ஆயிரத்து 418 வாக்குச் சாவடிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன. தமி ழகம் முழுவதும் மொத்தமாக 92 ஆயிரத்து  771 வாக்குச்சாவடிகள் இறுதி செய்யப் பட்டுள்ளன.