tamilnadu

img

சென்னையில் 24,000 வீடுகள் தனிமைபடுத்தப்பட்டன

சென்னை, மார்ச் 28- சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தில் உள்ள கண்ணகி நகரில்  சுமார் 15,000 குடியிருப்பு கட்டிடங்களில் கிருமி நாசினியை தெளிக்கும்  பணியை சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் பிரகாஷ், வரு வாய் பேரிடர் ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் துவங்கி வைத்தனர். பின்னர் தீயணைப்பு வண்டியின் உதவியுடன் கிருமி நாசினி கலந்த தண்ணீர் அந்த பகுதில் உள்ள  அனைத்து வீடுகள்  மற்றும் கடைகளில் தெளிக்கப்பட்டது. முன்னதாக வருவாய் பேரிடர் ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியாதவது: கூட்டம் நெரிசல் உள்ள பகுதியில்  சுத்தம் மேற்கொள்ளும் பணி  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து கணக்கெடுத்து இதுவரை 88,695 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.  காவல்துறை கண்காணிப்பில் அந்த பணி  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநில அளவில் 557 செக் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் இன்னும் ரயில் பாதை வழியாக பயணம் மேற்கொண்டு வருகின்  றனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமூக இடைவெளியையும், கை கழுவுதலையும் தயவுசெய்து பின்பற்றுங்கள். தொடர்ந்து 24 மணி நேரமும் சுகாதாரத்துறை கட்டுப்  பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது.  அத்தியாவசிய தேவைக்காக  வெளியில் செல்லும்போது தனியாக செல்லுங்கள். அத்தியாவசிய பணியில் ஈடுபடும் பணியாளர்கள் அனைவரும் சரியாக விதிமுறை களை கடைபிடிக்க வேண்டும். ஊராடங்கை முழுமையாக பின்பற்றும் போது  நோய் பரவாமல் தடுக்கப்படுகிறது.

மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், சென்னையில் மட்டும் 24,000 வீடுகள் தனிமை படுத்தப்பட்டுள்ளது அவர்களது வீட்டில் ஸ்டிக்கர்ஸ் ஒட்டப்பட்டுள்ளது. அடிப்படை தேவைகளுக்கு மக்கள்  குறிப்பிட்ட மண்டல  எண்களை தொடர்பு கொள்ளலாம். போதுமான அளவுக்கு  5 நாட்களுக்கு தேவையான பொருட் களை வாங்கி வைத்துக்கொண்டால் வெளியே செல்வதை தடுக்க லாம் என்றார்.