tamilnadu

img

அரசு சலுகை அளிக்குமா? வெட் கிரைண்டர் உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு

கோவை , மே 1- அரசு சலுகைகள் அளித்தால் மட்டுமே வெட் கிரைண்டர் உற்பத்தியை மீண்டும் துவக்க முடியும் என வெட் கிரைண்டர் உற்பத்தியாளர்  சங்கம் அறிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக ஏற்பட்டுள்ள தொழில்  பாதிப்புகள் குறித்து கோவை மாவட்ட  வெட்கிரைன்டர் தயாரிப்பாளர் சங்கத்தினர் (கவுமா) பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தினர். அப்போது அவ்வமைப்பின் தலைவர் சௌந்திரகுமார்  கூறுகையில் , ஊரடங்கு காரணமாக வெட் கிரைண்டர்  தயாரிப்பாளர்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறோம்  .

இதனால் ஊரடங்கு முடிந்த பின் உடனடியாக தொழிலை துவங்க முடியாத நிலையில் உள்ளோம். ஆகவே வங்கிகளில் வட்டி சலுகை,வட்டி தள்ளுபடி, மானியம் போன்றவை வெட்கிரைண்டர் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட  வேண்டும் என அவர் தெரிவித்தார். மேலும், வங்கிகள் வட்டியை முழுவதுமாக தள்ளுபடி  செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  3 மாதத்திற்கான  வட்டிதொகையினை தள்ளுபடி  செய்ய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றார். இந்த தொழிலில் 600க்கும் மேற்பட்ட கிரைண்டர்  தயாரிப்பாளர்களும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் நேரடியாக ஈடுபட்டுள்ளனர்.   மறைமுகமாக இந்த தொழிலை நம்பி 40 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர் என தெரிவித்தார்.

லாக்டவுனுக்கு பின்னர் வெட்கிரைண்டர் உற்பத்தியாளர்களுக்கு  அரசு மூலதன முதலீட்டை மானியமாக  வழங்க வேண்டும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஊழியர்களுக்கு எந்த வருவாயும் இன்றி  சம்பளம் கொடுத்துள்ளோம். ஆகவே , விற்றுமுதல்(Turn over) அடிப்படையில்  மூலதன முதலீட்டை மானியமாக அரசு வழங்கிட வேண்டும்.  இந்த தொழிலை நம்பியுள்ள 40 ஆயிரம் குடும்பத்தினரை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று வலியுறுத்தினார்.