tamilnadu

img

சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தது ஃபெடார் ரோபோ!

ரஷ்யாவின் மனித உருவிலான ஃபெடார் ரோபோ வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்திருப்பதாக நாசா உறுதி செய்துள்ளது.

கடந்த 22-ஆம் தேதி ரஷ்யா ஃபெடார் என்ற மனித ரோபோவை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியது. ஸ்கைபோட் எஃப் 850 என்ற அடையாள எண்ணுடன் அனுப்பப்பட்டுள்ள இந்த ரோபோ, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு  அவசர காலங்களில் உதவி செய்யவும், ரோபோவின் செயல் திறனை பரிசோதனை செய்யவும், சோயுஸ் எம் எஸ்-14 என்ற ஆளில்லா விண்கலம் மூலம் இந்த ரோபோ அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விண்கலம், கடந்த 24-ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தின் அருகே சென்றது. ஆனால், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கும் முயற்சி தோல்வி அடைந்தது. இதை அடுத்து, நேற்று அந்த கோளாறுகள் சரிசெய்யப்பட்டு, மீண்டும் விண்வெளி நிலையத்துடன் விண்கலம் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஃபெடார் ரோபோ விண்வெளி நிலையத்தை சென்றடைந்திருப்பதாக நாசா இன்று உறுதி செய்துள்ளது.