tamilnadu

img

கொரோனா ஊரடங்கு எதிரொலி.... ஓசோன் படலத்தில் திடீர் மாற்றம்?  

லண்டன் 
உலகில் மக்களின் இயல்புநிலையைக் கடுமையாகப் பாதித்துவரும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடு இல்லாமல் என் தனி வழி என்ற போக்கில் பரவி வருகிறது. இந்த கொடூர கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை கடைபிடித்து வருவதால் இயற்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.இந்தியாவில் உள்ள கங்கை உள்ளிட்ட நதிகளின் நீர்கள் நன்னீராக மாறியுள்ள உள்ளது. 

வாகனங்கள் இயக்கம் குறைப்பு, தொழிற்சாலைகள் மூடி இருப்பதால் காற்று பாசுபாடு குறைந்துள்ளது. இதனால் ஓசோன் படத்திலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சூரிய ஒளியிலிருந்து வெளியாகும் தீங்கு விளைவிக்கக் கூடிய புற ஊதா கதிர்களைப் பூமிக்கு வராமல் தடுக்கும் இந்த ஓசோன் படலம் கடந்த அரை நூற்றாண்டுகளாக நிலவும் காற்று மாசு காரணமாகச் சேதமடைந்துள்ளது. அதாவது பெரிய துளைகள் ஏற்பட்டு உலகம் முழுவதும் பலத்த வானிலை மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆக்சிஜன் படலமான இந்த ஓசோன் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிப்பதால் அதிலுள்ள துளைகளைக் குறைக்க உலகநாடுகள் பல்வேறு மாநாடுகளை நடத்தின. 

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாகப் பூமியில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றத்தால் ஓசோனில் ஏற்பட்டிருந்த அந்த ராட்சத துளை தாமாக மூடிக்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. செயற்கைக்கோள் உதவியுடன் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் ஆய்வு மேற்கொண்ட ஆய்வின் மூலம்  கண்டறியப்பட்டுள்ளது.  

ஐரோப்பிய மையத்தின் (ஈ.சி.எம்.டபிள்யூ.எஃப்) கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்றச் சேவை (சி 3 எஸ்), கோப்பர்நிக்கஸ் வளிமண்டல கண்காணிப்பு சேவை (சிஏஎம்எஸ்) ஆகியவையும் இதனை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இந்தக் கூற்றினை சில விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர். ஓசோனில் மிகப்பெரிய துளை ஏற்பட்டதும் அதுதாமாக மூடியதும் போலார்வோர்டெக்ஸ் எனப்படும் வாயு சுழற்சியே காரணம் என சில விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர்.

;