tamilnadu

img

கொரோனவிலிருந்து மீண்ட 104 வயது மூதாட்டி... இத்தாலியில் ருசிகரம் 

ரோம் 
கொரோனா என்னும் கொடிய வைரஸால் உலகில் அதிக உயிரிழப்பைச் சந்தித்துள்ள இத்தாலி நாடு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. அங்கு இதுவரை 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.   

இந்நிலையில், இத்தாலியில் சானுசா என்ற 104 வயதான மூதாட்டி கொரோனா வைரஸிலிருந்து மீண்டுள்ளார். தான் மீண்டுள்ளதாக அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். கொரோனாவை கண்டு உலகமே மிரண்டு வரும் நிலையில் 104 வயது இத்தாலி மூதாட்டி குணமடைந்துள்ளது உலக மக்களுக்கு ஒருவித நம்பிக்கையையும், போராடும் குணத்தையும் அளித்துள்ளது.  
 

;