tamilnadu

img

காவல் அதிகாரி வில்சன் கொலையில் முக்கிய நபர் கைது

பெங்களூரு, ஜன.18- குமரி மாவட்டம் களியக்கா விளை காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல் லப்பட்ட வழக்கில் மூளையாக செயல்பட்டதாக மெகபூப் பாஷா என்பவரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். தமிழக - கேரள எல்லையில் குமரி மாவட்டம் களியக்காவிளை யில் உள்ள சோதனைச் சாவடியில் பணியிலிருந்த களியக்காவிளை காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் வில்சன் (57) என்பவர் கடந்த 8 ஆம் தேதியன்று சுட்டுக்கொல் லப்பட்டார். இந்த சம்பவத்தில் பயங்கர வாத அமைப்புகளுடன் தொடர்பு டைய அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரை கர்நாடக மாநிலம் உடுப்பியில் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் மீது ‘உபா‘ சட்டமும் பாய்ந்துள்ளது. கைதான அப்துல் சமீம், தவு பிக் ஆகியோர் அளித்த தகவலின் பேரில் அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த மெகபூப் பாஷா என்பவர் கர்நாடகாவில் கைது செய்யப் பட்டுள்ளார். அவரிடம் பெங்க ளூரு காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர். ஏற் கெனவே கைதான அல் உம்மா அமைப்பை சேர்ந்த 3 பேர் தந்த தகவலின் பேரில் மெகபூப் பாஷா கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

;