tamilnadu

ராணுவ ரேசன் மீண்டும் அமலாகிறது

புதுதில்லி, ஜுன் 19- மளிகை உள்ளிட்ட பொருட்கள் ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்தத் திட்டத்தை கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி மத்திய அரசு நிறுத்தியது. அதற்கு பதிலாக நாள்தோறும் 117 ரூபாய் எனக் கணக்கிட்டு பணமாக வழங்கப்படும் எனஅறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு பாதுகாப்புத் துறையின் முப்படை வீரர்கள், அதிகாரிகள் தரப்பில் இருந்தும் விமர் சனங்கள் வந்தன. பயனுள்ள திட்டத்தை முடக்கிவிட்டதாக குற்றச்சாட்டும் எழுந்தது. பாதுகாப்புத்துறை அமைச்ச ராக ராஜ்நாத் சிங் பொறுப்பேற்றதை அடுத்தும் இதே கோரிக்கை முன்வைக் கப்பட்டன. பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் பழைய திட்டத்தையே நடைமுறைப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு இதனை ஏற்றுக் கொண்டுள்ளது.