tamilnadu

img

கோவை வனச்சரகத்தில் மேலும் ஒரு யானை உயிரிழப்பு வன உயிரின ஆர்வலர்கள் அதிர்ச்சி

மே.பாளையம், ஜூலை 31- மேட்டுப்பாளையம் வனச் சரகத்தில் சிகிச்சைப் பலனின்றி யானை உயிரிழந்த சம்பவம் வன உயிரின ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட நெல்லிமலை வனப்பகுதியில் ஆண் காட்டு யானையொன்று உடல்நலக் குறைவு காரணமாக நடக்க முடியா மல் அவதிப்பட்டு வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து வனத்துறை மருத்துவ குழுவினர் யானைக்கு சிகிச்சையளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி யானை பரிதா பமாக உயிரிழந்தது. இதனைய டுத்து இறந்த யானையின் உடல் மாவட்ட வன அலுவலர் வெங்க டேஷ் முன்னிலையில் உடற் கூறாய்வு செய்யப்பட்டு அதன் உடல் பாகங்கள் சில எடுக்கப்பட்டு ஆய்விற்காக கொண்டு செல்லப் பட்டுள்ளது.

முதற்கட்ட ஆய்வில் மற்ற யானைகளுடன் நடைபெற்ற மோதலில் யானையின் வாய் பகுதி யில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என் றும், முழுமையான ஆய்விற்கு பின் னரே யானையின் இறப்பிற்கான காரணத்தை கண்டறிய இயலும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.  

முன்னதாக, கோவை வனக் கோட்டத்தில் கடந்த ஆறு மாத காலத்தில் மட்டும் 15 காட்டு யானை கள் இறந்துள்ளன. குறிப்பாக, ஜூன் மாதம் மேட்டுப்பாளையத் தில் ஆண் யானையொன்று சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மேட்டுப் பாளையத்தை ஒட்டியுள்ள சிறு முகை வனப்பகுதியில் எட்டு யானை கள் அடுத்தடுத்து உடல்நலக்குறை வால் இறந்து போயின. இறந்த யானைகள் பெரும்பாலும் 20 வய திற்குட்பட்டவை என்பதால் இந்த இளம் யானைகளுக்கு எப்படி திடீர் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது என்று வன உயிரி ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், கோவை வனக்கோட்டதில் யானை களின் தொடர் மரணங்கள் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியதோடு இதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுபெற்றன. இதனையடுத்து, தமிழக அரசு சார்பில் கூடுதல் முதன்மை வனப் பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தலைமையில் 11 பேர் கொண்ட சிறப்பு உயர்மட்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு யானைகளின் தொடர் மரணங்க ளுக்கான காரணங்களை கண்ட றிந்து ஆறு மாதத்தில் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது. அரசின் இந்த சிறப்புக்குழு அமைக் கப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகி யும் இன்னும் இக்குழு ஆய்வை  துவக்கவில்லை. விரைவில் வல்லு நர் குழுவின் ஆய்வுகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரி வித்துள்ளதாவது, இவ்வாண்டு கோவை வனக்கோட்டதில் இறந்த யானைகளில் நான்கு யானைகள் அவற்றுக்கிடையே நடைபெற்ற மோதலால் காயப்பட்டு இறந்தி ருக்கலாம் என முதற்கட்ட பரிசோத னையில் தெரிய வந்துள்ளது. பவானியாற்றின் நீர்தேக்க பகுதி யான பெதிக்குட்டை பகுதியில் எட்டு யானைகள் உடல்நலக்குறை வால் இறந்துள்ளது

குறித்து முழு மையான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. காட்டுக்குள் பரவி வரும் சீமை கருவேலை உள்ளிட்ட தாவரங்களினாலா அல்லது நீர் மாசுபாடா என ஆய்வறிக்கைக்கு பின்னரே தெரிய வரும். இந்த முழு மையான அறிக்கை கிடைக்க இன் னும் ஓராண்டாகலாம். அது வரை யானைகளின் உடல்நலக்குறை விற்கு இது தான் காரணம் என எதையும் உறுதியாக கூற இயலாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;