tamilnadu

img

மேகாலயா கிராமப்புறங்களில் மைக்ரோ ஏடிஎம் சேவை 

மேகாலயா கிராமப்புற வாழ்வாதார சங்கம் (எம்.எஸ்.ஆர்.எல்.எஸ்) , கிராம வாங்கி மற்றும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியுடன் இணைத்து கிராமப்புறங்களில் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது.இந்த சேவைகளை மேகாலயா முதல் கே.சங்மா துவக்கி வைத்துள்ளார்.

மைக்ரோ ஏடிஎம்கள் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கே செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வாங்கி சேவை தொடரப்பட்டுள்ளது. அடிப்படை வாங்கி உள்கட்டமைப்பு இல்லாததால் பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை செயல்படுத்த தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த சேவைகளை பெற நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. தற்போது,  மேகாலயா கிராமப்புற வாழ்வாதார சங்கம் (எம்.எஸ்.ஆர்.எல்.எஸ்) மேகாலயா கிராம வங்கி (எம்.ஆர்.பி) மற்றும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்ட்) இணைந்து வழங்கியுள்ளது. மக்களுக்கு எளிய வழியில் திட்டங்களை செயல்படுத்த எதுவாக அமையும் என சங்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எம்.எஸ்.ஆர்.எல்.எஸ் ஜூன் மாதத்தில் எம்.ஆர்.பியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.  இதில் 84 வங்கி உதவி குழுக்கள் (சுய உதவிக்குழுக்கள்) ‘வங்கி சக்சிஸ்’ ஆக செயல்படுகின்றன. அவை வங்கியின் கிளைகளுடன் பி.சி.ஏ.க்களாக நிலை நிறுத்தப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, ஒவ்வொரு சுய உதவிக்குழுக்கும் தலா ஒரு மைக்ரோ ஏடிஎம் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.