tamilnadu

img

யெஸ் வங்கி மோசடி வழக்கு... வாத்வான் சகோதரர்களுக்கு ஜாமீன்

மும்பை
யெஸ் வங்கியில் நடந்த பண மோசடி மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கபில் வாத்வான், தீரஜ் வாத்வான், யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர், அவரது மனைவி பிந்து கபூர், மகள்கள் ரோஷ்ணி, ரேகா ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. 

சிபிஐ தரப்பிலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த மோசடி முக்கிய குற்றவாளிகளான வாத்வான் சகோதரர்கள் மே 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். வாத்வான் சகோதரர்கள் தவிர வழக்கில் தொடர்புடைய மற்ற அனைவருக்கும் ஜூலை 15-ஆம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  

இந்நிலையில் இந்த வழக்கில் வாத்வான் சகோதரர்களுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இருவரும் தங்களது பாஸ்போர்ட்டை சமர்ப்பித்து, ரூ.1 லட்சம் பிணைத்தொகை செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்ற காரணத்தினால் தான் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். எனினும் இந்த ஜாமீனால்  வாத்வான் சகோதரர்களுக்கு எந்த பயனும் இல்லை. ஜாமீன் வழங்கப்பட்டாலும் இருவரும் தொடர்ந்து சிறையில் தான் இருக்க வேண்டும். வெளியே வர முடியாது. காரணம் சிபிஐ வழக்கிலும் வாத்வான் சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் இவர்கள் சிறையில்தான் இருக்க வேண்டும். அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 

;