tamilnadu

img

மத்திய அமைச்சரின் அழைப்பை சீந்துவாரில்லை... சிஏஏ ஆதரவு கருத்தரங்கம் பாலிவுட் பிரபலங்கள் புறக்கணிப்பு

மும்பை:
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்குஆதரவாக பாஜக ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொள்ளாமல் பாலிவுட் பிரபலங்கள் புறக்கணித் துள்ளனர்.‘குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மீதான புரட்டுகளும் உண்மைகளும்’ என்ற தலைப்பில் மும்பையில் இந்த கருத்தரங்கிற்கு, பாஜக ஏற்பாடு செய்திருந்தது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னின்று இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார்.இதில் கலந்து கொள்ளுமாறு பாலிவுட் மற்றும் மராத்தி சினிமா துறையைச் சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, புகழ்பெற்ற திரைப்பிரபலங்கள் ஜாவேத் அக்தர், விக்கி கவுசல், ஆயுஷ்மான் குரானா, ரவீணா டாண்டன், போனி கபூர், கங்கனா ரணாவத், மாதூர் பந்தார்கர் ஆகியோர் கருத்தரங்கில் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.ஆனால், முன்னணி திரைப்பிரபலங்கள் யாரும் அந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்பதும், பாஜகவின் கருத்தரங்கை அவர்கள் புறக்கணித்து விட்டதும் தற்போது தெரியவந்துள்ளது.ரித்தேஷ் சித்வானி, பூஷன் குமார், குணால் கோலி, ரமேஷ் தவுரானி, ராகுல் ராவெய்ல் உள்ளிட்ட ஒருசிலர் மட்டுமே கலந்துகொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

;