tamilnadu

img

சாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொலை

மும்பை, மே 29-பாயல் தட்வி. இவருக்கு மருத்துவராகி சமூக சேவை செய்ய வேண்டும்என்பதே விருப்பம். மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்கோன் என்ற பகுதியைசேர்ந்த இவர், மருத்துவ படிப்பு முடிந்த பிறகு பழங்குடியினருக்காக மருத்துவ சேவையாற்ற வேண்டும் என்று கனவு கண்டார்.மும்பையில் உள்ள டோபிவாலா மருத்துவக் கல்லூரியில் பெண்கள்நல மருத்துவம் படித்து வந்தார். ஆனால், அந்தக் கனவுகள் எல்லாம் நிறைவேறாமலேயே போனது. கடந்த 22ஆம் தேதி தூக்கு மாட்டிக் கொண்டபாயல், தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.அவர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், அவர் கல்லூரியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, தூக்கு மாட்டிக் கொண்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அக்ரிபடா காவல் நிலையத்தில் இதுதொடர்பாக மூன்று இருப்பிட மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இவர், இடஒதுக்கீட்டின் கீழ் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அங்கிருந்த மூன்று மருத்துவர்கள், பாயலை சாதியின் அடிப்படையில் பேசி துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனை தாங்கிக் கொள்ள இயலாமல் பாயல் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.பாயலின் தாய் ஆபீதா தட்வி இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான புகார் ஒன்றை அம்மருத்துவமனையின் டீனிடம் வழங்கியுள்ளார். புற்றுநோய்க்காக அங்கு சிகிச்சை பெற்றுவந்த ஆபீதா, பாயல் சந்தித்த இன்னல்களை தாம் நேரில் பார்த்ததாகக் கூறுகிறார்.“அப்போதே புகார் தர இருந்தேன். ஆனால் பாயல் என்னை தடுத்துவிட்டார். புகார் அளித்தால், அதிகமான துன்புறுத்தலுக்கு ஆளாக வேண்டிவருமோ என்று பாயல் அஞ்சினார்,” என்று டீனுக்கு எழுதிய கடிதத்தில்ஆபீதா குறிப்பிட்டுள்ளார். மேலும் நோயாளிகளுக்கு முன்பாகவே பாயலை அங்குள்ள சில மூத்த மாணவர்கள் அவமானப்படுத்துவார்கள் என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து மருத்துவம் பயிலவிட மாட்டோம்என்று மிரட்டியதால் பாயல் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.மகாராஷ்டிரா உறைவிட மருத்துவர்கள் அமைப்பு (ஆஹசுனு) இதில் சம்பந்தப்பட்ட இருப்பிட மருத்துவர்களை இடைநீக்கம் செய்துள்ளது.

;