tamilnadu

img

இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி கடும் சரிவு...

மும்பை:
கொரோனா தொற்று காரணமாக 2020-ஆம் ஆண்டில் உலக வர்த்தகம் 13 முதல்32 சதவிகிதம் வீழ்ச்சியை சந்திக்குமென உலக வர்த்தக அமைப்பு (WTO) கணித்துள்ளது.இந்நிலையில், இந்தியாவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட ஏப்ரல் மாதத்தில் வர்த்தக ஏற்றுமதி 60.3 சதவிகிதமும், இறக்குமதி 58.7 சதவிகிதமும் சரிவைச் சந்தித்துள்ளது. தற்போது மே மாதத்திலும் ஏற்றுமதி 36.5 சதவிகிதம் (19.5பில்லியன் டாலர்), இறக்குமதி 51 சதவிகிதம் (22.20 பில்லியன் டாலர்) என வீழ்ச்சிகண்டுள்ளது. 

2020-ஆம் ஆண்டின், ஏப்ரல், மே மாத ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்தை, 2019ஆண்டோடு ஒப்பிடுகையில், அது மைனஸ்33.66 சதவிகிதம் என்ற எதிர்மறை நிலைக்குப் போயிருக்கிறது.2020 ஏப்ரலில் 16.45 பில்லியன் டாலர்களாக (1 லட்சத்து 25 ஆயிரத்து 409 கோடியே4 லட்சம் ரூபாய்) ஏற்றுமதி இருந்துள்ளது. இது 2019 ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடும் போது மைனஸ் 8.92 சதவிகிதம் ஆகியிருக்கிறது. 2019 மே மாதத்தில் 29.99 பில்லியன் டாலர்களாக (2 லட்சத்து 9 ஆயிரத்து280 கோடியே 62 லட்சம் ரூபாய்) இருந்தஏற்றுமதி, 2020 மே மாதத்தில் 19.05 பில்லியன் டாலர்களாக (1 லட்சத்து 44 ஆயிரத்து 166 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. மைனஸ்36.47 சதவிகிதம் என்ற அளவிற்கு ஏப்ரல்மாதத்தில் ஏற்றுமதி வீழ்ச்சி அடைந்துள் ளது. ரூபாய் மதிப்பீட்டின்படி பார்த்தால், இது மைனஸ் 31.11 சதவிகிதம் ஆகும்.

இறக்குமதியும், 2019 ஏப்ரலைக் காட்டிலும், 2020 ஏப்ரலில் 9.30 பில்லியன் டாலர்களாக (70 ஆயிரத்து 907 கோடியே 57 லட்சம் ரூபாய்) மைனஸ் 18.43 சதவிகிதம்அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது. 2019 மேமாதத்தில் 45.35 பில்லியன் டாலர்களாக (3 லட்சத்து 16 ஆயிரத்து 448 கோடியே 93 லட்சம் ரூபாய்) இருந்த இறக்குமதி, மே 2020-இல் 22.20 பில்லியன் டாலர்களாக (1 லட்சத்து 67 ஆயிரத்து 977 கோடியே 68 லட்சம் ரூபாய்) சரிந்துள்ளது. ஏற்றுமதி- இறக்குமதி வர்த்தக சரிவு காரணமாக, மே 2020ஆம் ஆண்டில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 3.15 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.மே மாதத்தில், அரிசி, மருந்துப் பொருட்கள், மசாலா, இரும்புத் தாது உள்ளிட்ட முக்கியமான பொருட்களின் ஏற்றுமதி மட்டுமே அதிகமாக இருந்துள்ளன. இறக்குமதியைப் பொறுத்தளவில், இரும்பு தாது மூலப்பொருள், பொறியியல் பொருட்கள் அதிக அளவில் இறக்குமதி ஆகியிருக்கின்றன.

;