tamilnadu

img

ஓபிசி தலைவர்களை திட்டமிட்டு தோற்கடித்த பாஜகவினர்...மகாராஷ்டிர பாஜகவுக்குள் முட்டல் - மோதல் ஆரம்பம்

மும்பை:
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-வின் ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்ட சாதிப்பிரிவு) தலைவர்கள் திட்டமிட்டு, தோற்கடிக்கப்பட்டு இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் கட்சே குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிரத்தில் பாஜக ஆட்சியமைக்க முடியாமல் போனதைத் தொடர்ந்து, அக்கட்சிக்கு உள்ளாகவே மோதல் ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் ஒன்று சேர தொடங்கியுள்ளனர்.முன்னாள் அமைச்சர் பங்கஜா முண்டே,எதிர்கால நடவடிக்கைகள் குறித்து, தனது ஆதரவாளர்களுடன் டிசம்பர் 12-ஆம் தேதி ஆலோசனை நடத்தப் போவதாக கூறியுள்ளார். சொந்தக் கட்சியினரே தனது தோல்விக்கு காரணம் என்று கருதும் அவர், அநேகமாக பாஜகவில் இருந்து விலகி சிவசேனாவில் இணைவார் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், மற்றொரு மூத்த பாஜக தலைவரான ஏக்நாத் கட்சேவும் களத்தில் குதித்துள்ளார். “பாஜக-வுக்குள் ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்ட சாதிப்பிரிவு)தலைவர்கள் மக்களின் பேராதரவு பெற்ற தலைவர்களாக உருவாகி விடக் கூடாது என்பதற்காக அவர்களை சொந்தக் கட்சியினரே திட்டமிட்டுதேர்தலில் தோற்கடித்து விட்டார்கள்;ஓபிசி தலைவர்களுக்கு எதிராக தேர்தலில் சதித் திட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளது” என்று ஏக்நாத் கட்சே குற்றம்சாட்டியுள்ளார்.மேலும், “ஓபிசி தலைவர்களைத் தோற்கடித்த பாஜக நிர்வாகிகளின் பட்டியலை கட்சித் தலைமைக்கு கொடுத்தும்,இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று புகார் தெரிவித்துள்ள ஏக்நாத் கட்சே, “சிவசேனாவுடன் அடம்பிடிக்கும் போக்கை கடைப்பிடிக்காமல் இருந்திருந்தால் மகாராஷ்டிராவில் இப்போது பாஜக அரசாங்கம்தான் அமைந்திருக் கும்” என்றும்,“அத்தனை தோல்விகளுக்கும் பாஜகவே பொறுப்பேற்க வேண்டும்” என்றும் எதிர்ப்புக்குரல் எழுப்பியுள்ளார்.

;