மாஸ்டர் திரைப்படத்தின் முன்னோட்டம் (டீசர்) தீபாவளி அன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படத்திற்கு மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகம் இருந்த நிலையில் இத்திரைபடத்தின் முன்னோட்டம் (டீசர்) குறித்த படக்குழு அறிவித்துள்ளது. நவம்பர் 14 தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு மாஸ்டர் படத்தின் முன்னோட்டம் (டீசர்) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.