tamilnadu

img

பக்கோடா விற்ற பட்டதாரிகள்

மதுரை, ஏப். 1-

ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு; ஐந்தாண்டுகளில் 10 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு என்று கடந்த தேர்தலில் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பாஜகவின் பிரதமர் நரேந்திர மோடி,பின்னர் இளைஞர்கள் பக்கோடா விற்று பிழைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று கூறியது, தற்போதைய நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் மிக முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு உள்பட மோடி அரசின் வெற்று வாய்ச்சவடால் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரச்சாரத்தில் சுட்டிக் க்காட்டி விமர்சித்தும் கேள்வி எழுப்பியும் வருகின்றனர். இத்த கைய பிரச்சாரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினரின் கேள்விகளும் நூதனப் பிரச்சாரமும் கவனத்தை ஈர்த்துள்ளது. மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து ஏராளமான இளைஞர்களும் மாணவர் களும் களத்தில் இறங்கியுள்ளனர்.மோடி மற்றும் எடப்பாடி அரசுகளின் வேதனைகளைப் பட்டிய லிட்டு கிராமம் கிராமமாக டிஜிட்டல் வாகனம் மூலம் பிரச்சாரம் மேற்கொண்ட இளைஞர்கள் திங்களன்று பட்டதாரி அங்கிகளை அணிந்துவீதியில் நின்று பக்கோடா விற்று, மோடி அரசின் வாய்ச்சவடாலை அம்பலப்படுத்தி வாக்காளர்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டனர்.


அப்போது கூடிய மக்கள், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உறுதிசெய்யாத, இருக்கும் வேலைவாய்ப்புகளையும் பறித்து எண்ணற்றோரை வீதிக்கு அனுப்பிய, பணமதிப்பு நீக்கம்மற்றும் ஜிஎஸ்டி என அராஜகத் தாக்குதலை நடத்தி பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை பறித்த கொடுமைகளை யெல்லாம் பகிர்ந்து கொண்டனர். மோடி இனி ஆட்சிக்கு வரக்கூடாது என்ற தங்களது உள்ளக்குமுறலை மக்கள் வெளிப்படுத்தினர். இந்தப் பிரச்சாரத்தில் பங்கேற்ற வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா பேசுகையில், இந்திய தேசத்தின் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்விக் கனவுகளை தகர்த்தது மோடி அரசு. இருக்கிறவேலைவாய்ப்புகளை பாதுகாக்கவும் இல்லை; புதிய வேலைவாய்ப்பு களை உருவாக்கவும் இல்லை; மாறாக இப்போது மீண்டும் ஆட்சிக்குவாய்ப்புத் தாருங்கள் என்று சற்றும் வெட்கமின்றி மக்களிடையேவருகிறார்கள்.


அனைத்து தொகுதி களிலும் வாலிபர் சங்கமும், மாணவர் சங்கமும் மோடி அரசின் இந்த வெற்று வாய்ச்சவடால்களையும், தமிழகத்தில் எடப்பாடி அரசின் அட்டூழியங்களையும் ஊழல்களை யும் அம்பலப்படுத்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். வர லாற்று சிறப்புமிக்க மதுரை தொகுதி யில் வளர்ச்சியும், நவீனமும் கொண்டுவர, வேலைவாய்ப்புதரும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த, தென் தமிழகத்தில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவாக இருக்கும்சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற உறுதி அளித்திருக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக இப்பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளோம் என தெரி வித்தார்.இப்பிரச்சாரத்தில் வாலிபர் சங்கத்தின் துணைச் செயலாளர் சி.பாலச்சந்திரபோஸ், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் செல்வா, மத்தியக்குழு உறுப்பினர் ஜென்னி, இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் எம்.கண்ணன், மாவட்டத் தலைவர் க.பாலா, செயலாளர் வேல்தேவா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

;