திண்டுக்கல், ஜூன் 2- திண்டுக்கல் அருகேயுள்ள அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கியூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ரத்த தான கழக மும், டிரீம் பாய்சும் அமைப்பும் இணைந்து ஞாயிறன்று ரத்த தான முகாம் நடத்தின. முகாமிற்கு ரத்த தான கழகப் பொறுப்பாளர் விக்டர் தலைமை வகித்தார். திண்டுக்கல் அரசு ரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர் பிரபாகரன், வாலிபர் சங்க மாநில துணைச் செயலாளர் சி.பாலச் சந்திரபோஸ், மாவட்டச் செயலா ளர் பாலாஜி உள்ளிட்ட பலர் பங் கேற்றனர். 50க்கும் மேற்பட்ட வர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.