tamilnadu

img

உலகத் தாய்மொழி நாள் உறுதியேற்பு...

நாமக்கல், பிப்.21- உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு, குமாரபாளை யம் மொழிப்போர் தியாகிகள் நினைவுத்தூண் அமைப்புக் குழு சார்பில் பேரணி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பிப்.21 ஆம் தேதி உலகத் தாய் மொழி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, புத னன்று நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மொழிப் போர் தியாகிகள் நினைவுத்தூண் அமைப்புக்குழு சார்பில்  உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது. இதில் தனியார்  கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த தமிழ் துறை மாணவ,  மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்ட பேரணி நடை பெற்றது. இப்பேரணி குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவி லிருந்து துவங்கி, மொழிப்போர் தியாகிகள் நினைவுத்தூண் அருகே நிறைவடைந்தது. இப்பேரணியில் தாய்மொழி குறித்து வாசகங்கள் அடங்கிய பதாகை ஏந்திய மாணவ, மாணவிகள், “தமிழுக்கு அமுதென்று பேர், தமிழ் எங்கள் உயிருக்கு நேர், தமிழும் தமிழ் நாடும் எங்கள் இரு கண் கள்” என்ற முழங்கியபடி சென்றனர்.