பிரபல தமிழ் நடிகை ரேவதி கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்கிய ‘மித்ரா மை ஃபிரண்ட்’ - திரைப்படம் தேசிய விருது பெற்றது. அவர் 2004 ல் இயக்கிய ‘ஃபிர் மலேங்கே’ - படமும் அவருக்கு மிகப்பெரிய பாராட்டுக்களைக் கொண்டு சேர்த்தது. இந்தித் திரைப்படவுலகில் கவனம்பெற்ற ரேவதி தற்போது ‘சலாம் வெங்கி’ - என்ற பெயரில் ஒரு படத்தைத் துவக்கியிருக்கிறார். கஜோல் நாயகி. முதலில் இதற்கு ‘தி லாஸ்ட் ஹுர்ரா’ - என்றுதான் பெயரிடப் பட்டிருந்தது. என்ன காரணத்திற்காகவோ அது தற்போது சலாம் வெங்கி ஆகியிருக்கிறது. பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் கஜோல் தனது இன்ஸ்டாகிராமில், “சொல்லப்படவேண்டிய கதை, தேர்வு செய்யப்பட வேண்டிய ஒரு பாதை, கொண்டாடப்படவேண்டிய ஒரு வாழ்க்கை ஆகியவற்றுக்கான ஒரு பயணத்தைத் துவங்குகிறோம். நம்ப இயலாத இந்த உண்மைக் கதையை உங்களோடு பகிர்ந்துகொள்ள மிகுந்த ஆவலோடு நாங்கள் இருக்கிறோம்” - என்று கூறியுள்ளார். ரேவதியின் முத்திரையில் இந்த வெங்கி எத்தனை சலாம்களைப் பெறுகிறது பார்ப்போம்!