திருவண்ணாமலை, நவ. 13- திருவண்ணாமலை மாவட்டம் சாத்த னூர் அணை மற்றும் குப்பனத்தம் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் தென்பெண்ணையாறு மற்றும் செய்யாற்றில் வெள்ளபெருக்கு ஏற் பட்டுள்ளது. இதனையடுத்து கரை யோர கிராமங்களில் வசிக்கும் மக்க ளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு ள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பெய்த கன மழையால் தாழ்வான பகுதி களை வெள்ளநீர் சூழ்ந்தது. விவசாய நிலங்கள், வடிகால் வசதி யற்ற குடியிருப்புகள் மற்றும் காலி இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள் ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர். ஜவ்வாதுமலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் குப்பனத்தம், செண்பகத் தோப்பு மற்றும் மிருகண்டா நதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குப்பனத்தம் அணைக்கு நள்ளிரவு நீர்வரத்து திடீரென அதிகரித்ததால், அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. ஞாயிறன்று அதிகாலை 2 மணி அளவில் குப்ப னத்தம் அணைக்கு விநாடிக்கு 1,500 கனஅடி நீர் வந்தது. அது அப்படியே செய்யாற்றில் திறந்துவிடப்பட்டது.
இதனால், செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 59.04 அடி உயரம் உள்ள குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் 54.25 அடியாக இருந்தது. அணையில் 579.50 மில்லி யன் கனஅடி தண்ணீர் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 286 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 228 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், குப்பனத்தம் அணைக்கு நள்ளிரவு நீர்வரத்து திடீரென அதிகரித்ததால், அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. திருவண்ணா மலை அருகே கிளியாப்பட்டு கிராமத்தில் வெள்ளநீர் சூழ்ந்து சாலையை கடந்து செல்லுகிறது. இதேபோல், சாத்தனூர் அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 116.25 அடியாக இருக்கிறது. அணையில் 6,711 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு ஞாயிறன்ற நன்பகல் 12 மணியளவில் விநா டிக்கு 3,400 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து தென் பெண்ணையாற்றில் விநாடிக்கு 4,500 கனஅடியும், காய்வாயில் விநாடிக்கு 200 கனஅடியும் என மொத்தம் விநாடிக்கு 4,900 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணை பகுதியில 10 மி.மீ., மழை பெய்துள்ளது. தென்பெண்ணை யாறு மற்றும் செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள தால் கரையோர கிராம மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு நீர்வளத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.