கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 41 ஆவது வார்டில் வார்டு சபா கூட்டம்
கரூர், அக். 28- கரூர் மாநாகராட்சிக்கு உட்பட்ட 41 ஆவது வார்டில் உள்ள ஜீவா நகரில் வார்டு சபா கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 41 ஆவது வார்டு பொதுமக்களுக்கு உடனடியாக நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. திறந்த வெளி கிணறுகளை கண்டறிந்து, அதற்கு மூடி போடுவது, குடிநீர், தெரு சாலைகள், சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், உடனடியாக திருமலை நகரில் சாக்கடை கால்வாய் அமைப்பது, ஜீவா நகரில் தெரு சாலைகள், சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகளை 65 லட்சம் ரூபாய் மதிப்பில் உடனடியாக துவக்குவது என முடிவு செய்யப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாநகராட்சி 41 ஆவது வார்டு கவுன்சிலர் எம். தண்டபாணி தெரிவித்தார். திமுக வார்டு செயலாளர் அ. விஸ்வா உட்பட வார்டு பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
