tamilnadu

img

திருப்பூர் மாநகராட்சியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

திருப்பூர், பிப்.19- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்  வாக்குப்பதிவு திருப்பூர் மாநகராட்சி யில் விறுவிறுப்பாக நடைபெற்றது. பிப்ரவரி 19 ஆம் தேதி சனியன்று  மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளி லும் காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கியது. இந்த மாநகராட்சிக்கு உட்பட்ட 42ஆவது வார்டு பாரப்பாளை யம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 406 ஆவது வாக்குச் சாவடியில் வாக் குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட் டதால் வாக்குப்பதிவு 7 மணிக்குத் தொடங்குவது தாமதம் ஆனது. அதன்  பிறகு தயார் நிலையில் இருந்த மாற்று  இயந்திரம் வரவழைக்கப்பட்டு வாக் குப்பதிவு தொடங்கப்பட்டது. இத னால் ஏறத்தாழ அரை மணி நேரம் வாக் குப்பதிவு தடைப்பட்டது. பிற பகுதிக ளில் அசம்பாவிதம் ஏதுமின்றி வாக்குப் பதிவு தொடர்ந்து நடைபெற்றது

கொரோனா தடுப்பு ஏற்பாடு

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நுழைவாயில் பகுதியில் உடல் வெப்ப நிலை அறியும் கருவி, கிருமி நாசினி தெளிக்க தனி மேஜை அமைத்து பணி யாளர்கள் வாக்காளர்களுக்கு பரி சோதித்து உள்ளே அனுப்பினர். வாக் குச் சாவடிகளில் அனைத்து வாக்கா ளர்களுக்கும் பாலிதீன் கையுறைகள் வழங்கப்பட்டு அதை அணிந்து கொண்டு வாக்குப் பதிவு செய்ய ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது. பல வாக் குச் சாவடிகளில் இந்த முறை பின்பற் றப்பட்டாலும் சில பகுதிகளில் வாக்கா ளர்களுக்கு கையுறைகள் வழங்கப்பட வில்லை. வெப்பநிலை பரிசோதனை, கிருமி நாசினி தெளிப்பும் கேட்வர்க ளுக்கு மட்டும் வழங்கப்பட்டது. வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்கு அப்பால் அரசி யல் கட்சிகள் மேஜை அமைத்து வாக் காளர் சிலிப்புகள் தரும் பணியில் ஈடு பட்டனர். காவல் துறையினர் அந்த  இடங்களில் ஒவ்வொரு கட்சிக்கும் தலா 2 பேர் மட்டுமே இருக்க வேண் டும், மற்றவர்கள் கூட்டம் சேரக் கூடாது  என்று சொல்லி கலைந்து போகும்படி கூறினர். சிறிது நேரம் அந்த நிலை தொடர்ந்தது. அதன்பிறகு பழைய படி அங்கு நான்கைந்து பேருக்கு மேல்  கூட்டமாகத் திரண்டு நின்றனர்.

வார்டு வரையறை குளறுபடி

ஏற்கெனவே முந்தைய வார்டு வரையறைப்படி நிர்ணயிக்கப்பட்ட எல்லை அடிப்படையில் இந்த நகர்ப் புற  உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சியில் வார்டு வரையறையில் ஏகப்பட்ட குழப்பம் இருந்தது. அத்துடன் கொரோனா கார ணமாக சராசரியாக 1000 பேருக்கு ஒரு  வாக்குச்சாவடி என்று பிரிக்கப்பட்டு இருந்தது. இதனால் சில பகுதிகளில் வாக்காளர்களின் வாக்குகள் எந்த  வாக்குச் சாவடியில் இடம் பெற்றிருக்கி றது என்று தெரியாமல் அலைக்கழிக் கப்பட்டனர். ஒரே குடியிருப்புப் பகுதி யைச் சேர்ந்த வாக்காளர்கள் பெயர் கள் வெவ்வேறு வார்டுகளில் வாக்கா ளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருந் தது. வழக்கமாக வாக்குப்பதிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக பணி யாளர்கள் மூலம் வாக்காளர் சீட்டு வீடு, வீடாக வழங்கப்படும். ஆனால் அதி லும் இம்முறை அனைத்து வாக்காளர் களுக்கும் வாக்காளர் சீட்டு முழுமை யாக வழங்கப்படவில்லை. தற் போதுள்ள வார்டு வரையறையை இந்த தேர்தல் முடிந்த பிறகு, அடுத்த தேர்தலுக்குள்ளாக குழப்படிகளைக் களைந்து தெளிவான முறையில் மாற்றி அமைக்க வேண்டியது அவசி யம் என்று பலரும் கூறினர்.

நெருக்கடியான வாக்குச்சாவடி

எட்டாவது வார்டு நேரு நகர் மாநக ராட்சி நடுநிலைப் பள்ளி மிகவும் நெருக் கடியான இடத்தில் அமைந்திருக் கிறது. இந்த பள்ளி வளாகத்தில் மட்டும் வாக்குச்சாவடி எண் 68 ஆண், 68 பெண்,  69 பொது, 70 பொது, 71 பொது என ஐந்து வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டி ருந்தன. ஏறத்தாழ 6 ஆயிரம் வாக்குகள்  இருக்கக்கூடிய இந்த வாக்குச் சாவடி மையத்தில் கொரோனா சமூக இடை வெளியை கடைப்பிடிப்பதற்கு எந்த வித வாய்ப்பும் இல்லை. காலை வாக் குப் பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத் திலேயே வாக்காளர்கள் அதிக அள வில் இங்கு குவிந்தனர். மிகவும் நெருக் கடியான நிலையில் வாக்காளர்கள் கூட்டம் திரண்டு இருந்தது. கூடுதலாக அருகாமையில் வேறு பள்ளியில் இந்த வாக்குச்சாவடி மையத்தைப் பிரித்து இட வசதி செய்திருக்கலாம் என்று வாக்காளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸில் வந்த இளைஞர்

திருப்பூர் பத்மாவதிபுரம் பகுதி யைச் சேர்ந்த மதனகோபால் என்பவ ரது மகன் ஜானகிராமன் (வயது 20). பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து  வரும் பட்டதாரி மாணவர். இவருக்கு ஏறத்தாழ 5 கிலோ மீட்டர் தொலைவில் மாநகராட்சி 8ஆவது வார்டு நேரு நகர் மாநகராட்சிப் பள்ளியில் வாக்கு இருந் தது. கடந்த பத்து நாட்களுக்கு முன்பு  விபத்தில் சிக்கிய ஜானகிராமனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு நடமாட  முடியாமல் சிகிச்சையில் இருந்து வருகிறார்.  இதையடுத்து அவரது உற வினர் பாரதி என்பவர் ஜானகிராமனை தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து வந்து, நேரு நகர் பள்ளி யில் வாக்களிக்கச் செய்தார். வாக்கா ளர்கள் வாக்களிக்க வேண்டிய ஜன நாயக கடமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இது போல் எலும்பு முறிந்து நடக்க முடியாமல் இருந்த வரை அழைத்து வந்ததாக பாரதி தெரி வித்தார். முன்னதாக நேரு நகர் வாக்குச்  சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கி  நடைபெற்றபோது சிலர் வாக்குப்பதி வில் முறைகேடு என்று சொல்லி தக ராறு செய்ய முயன்றனர். காவல் துறை யினர் தலையிட்டு அவர்களை அப் புறப்படுத்தினர். இதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற் றது.

கள்ள வாக்கு பதிவு

மணியகாரம்பாளையம் பள்ளி வாக்குச் சாவடியில் கள்ள ஓட்டு பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. அங்கு வந்த வாக்காளர் ஒருவர் வாக் காளர் அடையாள அட்டை இல்லாத நிலையில், தனது ஆதார் அட்டையை சான்றாகக் காட்டி வாக்குப் பதிவு செய்துவிட்டு சென்றுள்ளார். சற்று நேரத்தில் அதே பெயரில் வேறொரு நபர் வாக்களிக்க வந்தார். ஆனால் வாக்காளர் பட்டியலில் அவர் வாக்களித்து விட்டதாக பதிவாகி இருந்தது. இதையடுத்து இவர் பெய ரில் முன்னர் ஆதார் அட்டை ஆதாரத் தைக் காட்டி வாக்களித்தவர் கள்ள வாக்கு பதிவு செய்துவிட்டார் என்று புகார் எழுந்தது.  இது தவிர பொதுவாக மாநகராட் சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளி லும் சுமூகமான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது. அனைத்துப் பகுதிகளிலும் அரசியல் கட்சியினர் வாக்குச் சாவடிக்கு செல்லும் பாதை யில் மேஜைகள் அமைத்து வாக்காளர் களை தங்கள் சின்னங்களில் வாக்க ளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தபடி இருந்தனர். மாலை 3 மணி நிலவரப்படி திருப் பூர் மாநகராட்சியில் 39.34 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தது. பொது வாக அமைதியாகவும், விறுவிறுப் பாகவும் வாக்குப் பதிவு நடைபெற்றுள் ளது என்று தேர்தல் பணியாளர்கள் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத், மாநகராட்சி ஆணையர் கிராந் திகுமார் பாடி ஆகியோர் வாக்குச் சாவடி மையங்களில் நேரடியாக சென்று வாக்குப் பதிவு நடைபெறு வதை ஆய்வு செய்தனர்.