tamilnadu

விருதுநகர் மற்றும் இராஜபாளையம் முக்கிய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு  கொரோனா தொற்று உறுதியானது   பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81 ஆக உயர்வு

விருதுநகர், மே.22- விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் புதன் கிழமை வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 69 ஆக இருந்தது. இந்நிலையில், இராஜபாளை யத்தைச் சேர்ந்த 32 வயது ஆண், சிவகாசியைச் சேர்ந்த 30 வயது பெண் ஆகியோருக்கு தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.  கடந்த சில தினங்களாக  மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து விருது நகர் மாவட்டத்திற்கு தொழிலாளர்கள் பலர் குடும்பத்தினருடன் வருகின்றனர். இவர்கள் அனைவரையும் தனியார் கல்லூ ரிகளில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள அனைவரிடமும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோத னைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில், 3 வயது குழந்தை உட்பட 10 பே ருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அனைவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளாவில் இருந்து வந்த  75  வட மாநிலத் தொழிலாளர்களை தனிமைப்படுத்த உத்தரவு

இராஜபாளையம், மே.22- விருதுநகர் மாவட்டம் சேத்தூர் அருகே அனுமதியின்றி லாரியில் வந்த 75 வடமாநிலத் தொழிலாளர்களை தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ளது.  சேத்தூர்- சொக்கநாதன்புத்தூர் விலக்கு பகுதியில் சோத னைச்சாவடி உள்ளது. இங்கு போலீசார் பணியில் இருந்தனர். அப்போது கேரளாவில் இருந்து மேற்குவங்கத்துக்கு சென்று கொண்டிருந்த லாரியை நிறுத்தினர். அதை சோதனை செய்ததில் 75 வடமாநில தொழிலாளர்கள்  இருந்தனர். அதில் 45 பேருக்கு மட்டுமே அனுமதிச் சீட்டு  வழங்கப்பட்டிருந்தது. மீதமுள்ள 30 நபர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.  இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த போலீசார், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி, அனைத்து மேற்கு வங்கத் தொழிலாளர்களும்  தனியார் கல்லூரியில் தனிமைப் ப்படுத்தப்பட்டுள்ளனர்.  

மதுரையில் அதிர வைத்த மின் கட்டணம் - அதிர்ச்சியில் மக்கள்

மதுரை, மே  22- கொரோனாவை காரணமாக வைத்து அரசு மக்களை அச்சுறுத்தும்  வகையில் நடந்து வரு கிறது. குறிப்பாக மின் துறை கடந்த 2 மாதங்களாக வீடுகளுக்கான மின் உபயோக கணக்கீட்டிற்காக ரீடிங் எடுக்க வரும் கணக்காளர்கள் அதற்கான அட்டையில் பயனீட்டு யூனிட் மற்றும் தொகையைக் குறிப்பி டுவதில்லை. மாறாக குறிப்பிட்ட தேதிக்குள் மின் கட்டண வசூல் மையத்தில் சென்று  மின் கட்ட ணத்தைச் செலுத்தச் சொல்லுகி றார்கள். அதன்படி மின்கட்டண வசூல் மையம் சென்றால் அதிர்ச்சியடையும் வகையில் மிரட்டுகிறார்கள். உதாரணமாக கடந்த ஜனவரி மாதம் மின் கட்டணம் ரூ390, மார்ச் மாதம் ரூ.420 மின் கட்டணம் செலுத்திய நிலையில் இந்த மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.2200 செலுத்த வேண்டும் என அதிர்ச்சியூட்டும் தொகையை கூறி யுள்ளார்கள்.  மின் கணக்கீட்டாளிடம்  கடந்த ஒன்றரை வருடங்களாக அதிக பட்சம் ரூ.500 வரை செலுத்தி யுள்ளேன். தற்போது எப்படி ரூ.2200 என்று கேட்டால் அது தான் உங்க ளுக்கான மின் கட்டண தொகை என்று அதிரடியாக கூறுகிறார். தாங்கள் ரீடிங் எடுக்க வரும் போது ஏன் அட்டையில் பயனீட்டு அளவு மற்றும் தொகை குறிப்பிடவில்லை என்று கேட்டால் மின் அட்டை மூலம் கொரோனா தொற்றுக்கு ஆளாகி விடுவாராம். அப்படியானால் நூற்றுக்க ணக்கான வீடுகளுக்குச் சென்று ரீடிங் எடுப்பதால் மட்டும் இவருக்கு கொரோனா தொற்று ஏற்படாதா? கொ ரோனாவை காரணமாக வைத்து மின்துறை நிர்வாகம்  மக்களிடம்  கொள்ளையடிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. ஊரடங்கு காரண மாக மக்கள் வீட்டிலேயே இருப்பத னால் மின் கட்டணம் சற்றுஉயரலாம் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது தான். ஆனால் இப்படி 4 மடங்கு உயர்வது என்பது யாராலும் ஏற்றுக் கொள்ளமுடியாதது. இவர்கள் மின் பயனீட்டு அட்டையில் கடந்த முறை எடுத்த ரீடிங், இந்த முறை உள்ள ரீடிங் இவற்றை கணக்கில் கொண்டு தான் பயனீட்டு அளவு, தொகை இவற்றை அட்டையில் குறிப்பிட வேண்டும். இவை எதை யும் மேற்கொள்ளாமல் இவர்கள் சொல்லும் தொகையை செலுத்த வேண்டும் என்று கூறினால் எந்த  அடிப்படையில் நியாயம்.மக்களிட மிருந்து கொள்ளையடிப்பது தான் மக்களுக்கான அரசா? ஒருபுறம் வீடுகளுக்கான மின் உபயோ கத்திற்கு முதல் 100 யூனிட்டுகள் இலவ சம் என்று ஏமாற்றி  மக்களிடமிருந்து பல ஆயிரம்  பறிப்பது தான் இந்த அரசின் செயல்பாடா?  கொரோனா வை காரணமாகசொல்லி கொள்ளை யடிப்பது தான் அரசின் சாதனையா? அட்டையில் உள்ளபடி ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்த பட்ச தொகையே கடந்த மாதங்களில் வந்துள்ளது ஆனால் பெத்தானி யாபுரம் பகுதியில் வில்லியம் என்பவ ருக்கு ரூ.4800ம் சாரதாம்பாள் என்ப வருக்கு  2400ம் ராஜன் என்பவருக்கு  மார்ச் ரூ. 420 மின்கட்டண தொகை  தற்போது ரூ.2200 ஆக  உயர்ந்து ள்ளது. ஏற்கனவேகடந்த மூன்று மாதங்களாக போதிய வருமான மின்றி தவிக்கும் மக்கள் மீது தற்போது மின்சார கட்டணம் பேரிடியாக விழுந்துள்ளது.