நூலகத்தில் புரவலர் சேர்க்கை
மணலூர்பேட்டை, ஜூன் 23- தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை விழுப்புரம் மாவட்டம் மணலூர்பேட்டை கிளை நூலகத்தில் புரவ லர் சேர்க்கை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு, திருக்கோவிலூர் வாசகர் வட்டத் தலைவர் கவிமாமணி சிங்கார.உதியன் தலைமை வகித்தார். நூலகக் கொடையாளர் தா.சம்பத் முன்னிலை வகித்தார். நூலகப் பணி யாளர் மு.கோவிந்தன் வரவேற்றார். நல்நூலகர் மு.அன்பழ கன் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். திரு வண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு தலைமைக் காவலர் சி.ஜான் சைமன், ஓய்வுபெற்ற மூங்கில்துறைப்பட்டு கூட்டு றவு சர்க்கரை ஆலை கண்காணிப்பாளர் க.சிவரா மன் ஆகியோர் தலா ரூபாய் ஆயிரம் செலுத்தி புரவலர்க ளாக இணைந்தனர். மூத்தப் பத்திரிக்கை யாளர் சென்னை சொ.பன்னீர்செல்வம், உடற் கல்வி இயக்குநர் ம.பாலாஜி, நூலகர் மு.சாந்தி ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். நூலகப் பணியாளர் தே.பாஸ்கரன் நன்றி கூறி னார். ஆணையாளர் இல்லாத
ஆணையர் இல்லா நகராட்சி
இராஜபாளையம்,ஜூன் 23 விருது நகர் மாவட்டத்தி லுள்ள இராஜபாளையம் நக ராட்சி பெரிய நகராட்சி யாகும் 42 வார்டுகள் உள்ளன இரண்டுலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நக ராட்சியில் ஆணையாளர் பணியிடம் காலியாகி நான்கு மாதங்கள் ஆகி விட்டது. ரூ.42 கோடியில் ரயில்வே மேம்பாலப் பணிகளும், ரூ.198 கோடியில் தாமிர பரணி கூட்டு குடிநீர் திட்டப் பணிகளும், ரூ.247 கோடி யில் பாதாளச் சாக்கடைப் பணிகளும் நடைபெற்று வருகிறது. இப்பணி களுக்காக தோண்டப்படும் பள்ளங்கள் மூடப்படாததால் விபத்துகள் ஏற்படுகின்றன இது குறித்து நகராட்சி அலு வலகத்திற்கு மனு கொடுக்கச் சென்றால் ஆணையாளர் இல்லாத தால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். தமிழக அரசும் முதல்வரும் உடனடியாக இராஜ பாளையம் நகராட்சியில் காலியாக உள்ள ஆணை யாளர் பதவியை உடனடி யாக நிரப்பவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளது.