tamilnadu

உசிலம்பட்டி, திருமங்கலம், மேலூர் மருத்துவமனையில் பிசிஆர் கருவி பொருத்த தயக்கம் ஏன்? கேள்வியெழுப்பும் பொதுமக்கள்

மதுரை, ஜூன் 27- மதுரை மாவட்டம் உசிலம் பட்டியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. தவிர திருப்பரங்குன்றம், பேரையூர், திருமங்கலம், உசிலம்பட்டி, சோழவந்தான், வாடிப்பட்டி, மேலூர் ஆகிய ஊர்களில் தரம் மேம்படுத்தப்பட்ட நவீன வசதி களுடன் கூடிய அரசு மருத்துவ மனைகள் உள்ளன. மருத்துவத் துறையின் இணை இயக்குநர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரு கின்றன. கிராமப்பகுதிகளில் சளி, காய்ச்சல், இருமல் அறிகுறியுள் ளவர்களுக்கு இந்த மருத்துவ மனைகளில் மாதிரிகள் மட்டுமே சேகரிக்கப்படுகின்றன. இவை மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு அனுப்பப்படுகிறது. மதுரை ஆட்சியரின் கூற்றுப்பட்டி நாளொன்றுக்கு 1,200 முதல் 1,500 சோதனைகளே மேற்கொள் ளப்படுகின்றன. கிராமப்புறங்க ளில் எடுத்துச்செல்லும் முடிவுகள் தெரிவதற்கு எத்தனை நாட்களா கும் எனத் தெரியவில்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் விவசாயிகள், விவசாயக்கூலித் தொழிலாளர் களின் மாதிரிகளை அந்தந்த அந் தந்த மருத்துவமனைகளில் சோதித்து முடிவுகளை அறிவிக்க முடியும்.

ஆனால், அதற்கான நட வடிக்கைகளை மாவட்ட நிர்வா கம் சுகாதாரத்துறை தொடங்கிய தாகத் தெரியவில்லை. இது குறித்து மருத்துவர் ஒரு வரிடம் பேசியபோது, தாங்கள் கேட்பது சரியான தகவல்தான். ஒவ்வொரு மருத்துவமனை யிலும் அமைப்பதற்கு ஒரு பெருந் தொகை செலவாகும். இதற்கென தனியாக பணியாட்கள் நிய மிக்கவேண்டும் என்றார். மருத்துவத்துறை வட்டா ரத்தில் விசாரித்தபோது, ஒரு பிசிஆர் மிஷின் நிறுவுவதற்கு ரூ.25 லட்சம் மட்டுமே செலவலா கும். பணியாளர்களை அரசு நிய மிக்க வேண்டும். பெருந்தொற் றால் மதுரையில் உயிர்பலி அதி கரித்துக்கொண்டிருக்கும் நிலை யில் குறைந்தபட்சம் திருமங்க லம், உசிலம்பட்டி, மேலூர் மருத் துவமனைகளில் பிசிஆர் மிஷின்களை நிறுவினால் கிரா மப்புற மக்கள் பலன்பெறுவார கள். தொற்றுள்ளவர்களை அரு கிலுள்ள தனியார் கல்வி நிறு வனங்கள், நவீனமயமாக்கப்பட்ட திருமணமண்டபங்களில் தங்க வைக்கலாம். மதுரை மாவட்ட நிர்வாகம் ரூபாய் இரண்டு கோடி செலவழிப்பதற்கு தயங்குவது ஏன் எனத் தெரியவில்லை என் றார்.

;