tamilnadu

img

நான் எப்படி பிரதமராவேன்? - கணேஷ்

அங்கிள்.. குட்மார்னிங்..
என்னம்மா காலைலயே சுத்தக் கிளம்பியாச்சா.. 
இல்ல.. ரெண்டு நாள்ல ஸ்கூல் திறக்குதுல்ல.. ஒரு கட்டுரை எழுதணும்..
என்ன தலைப்பு குடுத்துருக்காங்க..
நாங்களே எழுதிக்கலாம்..
நல்ல ஸ்கூலாருக்கே... நீ என்ன எழுதப்போற.
நிறைய யோசிச்சுப் பாத்தேன்.. இந்த வெள்ளம் ஏன் வந்துச்சு.. இல்லேனா வெள்ளத்தத் தடுத்துருக்கலாமா.. ஆனா, வருஷா வருஷம் இப்புடி வர்றதில்லையே.. தடுப்பு நடவடிக்கைகள்னு செஞ்சு வேற பகுதில மழை பெஞ்சா என்ன பண்றது..
வடகிழக்குப் பருவ மழை இவ்வளவு பலமா இருக்கும்னு எதிர்பார்க்கல.. காலநிலை மாற்றம், வெப்பமயமாதல்னு வல்லுநர்கள் சொல்றாங்க.
இன்னும் ரெண்டு பேர் இந்தக் கட்டுரைய எழுதுறாங்க.. அதனால மீண்டும் கொரோனானு எழுத நெனச்சேன். மூளை இருக்கா.. எதுக்கு பயமுறுத்தறனு அம்மா சொன்னாங்க. அதான் ரூமுக்கு ரூம் நாலு மூலை இருக்கேனு வந்துட்டேன்.. 
சரி.. என்னதான் முடிவு பண்ணுன..
எல்லாப் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க ஒருத்தரால முடியும்னு நெனச்சேன்... அதனால தலைப்ப நான் பிரதமரானால்னு வெச்சுட்டேன். உங்ககிட்ட பேசுனா மசாலா கிடைக்கும்னு நெனச்சேன்..
இது எங்க காலத்துல நாங்க எழுதுன தலைப்பு.. அதுக்கு முன்னாடி ஒரு விஷயம்.. பிரதமர் ஒருத்தரால மட்டும் செஞ்சுர முடியாது. நல்ல கட்சி, நல்ல அமைச்சரவை.. நல்ல நாடாளுமன்ற உறுப்பினர்கள்னு தேவைப்படும்.. கொஞ்சம் மாத்தி யோசி.. நான் எப்படி பிரதமராவேன்னு எழுதுனா என்ன
இது நல்லாருக்கே அங்கிள்.. தகுதிகள் என்னனு நா படிச்சுருக்கேன்.. இந்தியக் குடியுரிமை இருக்கணும்.. மக்களவை அல்லது மாநிலங்களவை உறுப்பினர்.. மக்களவை உறுப்பினரா இருந்தா 25 வயசுக்கு மேலேயும், மாநிலங்களவை உறுப்பினர்னா 30 வயசுக்கு மேலேயும்னு இருக்கு.. அரசுத்துறைல வருமானம் கிடைக்கக்கூடிய எந்த வேலைலயும் இருக்கக்கூடாது..
பரவாயில்லையே... நினைவுல இருக்குதே.. அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள கட்டுரைல குறிப்பிட்டா நல்லா இருக்கும்.. இந்தத் தகுதிகள்லாம் பிரிவு 84ல இருக்கு.. அதே மாதிரி பிரதமர் தலைமைல அமைச்சரவை இருக்கும்.. குடியரசுத்தலைவருக்கு உதவ, ஆலோசனை சொல்ல இருக்கும்னு பிரிவு 74(1) சொல்லுது... பிரதமரை குடியரசுத்தலைவர்தான் நியமிப்பாரு.. அப்புறம் பிரதமரோட ஆலோசனைப்படி அமைச்சர்கள்.. இப்புடினு பிரிவு 75(1) சொல்லுது..
அங்கிள்... அப்படினா குடியரசுத்தலைவர கரெக்ட் பண்ணுனா போதுமா..?
அதான் இல்ல... மக்களவைத் தேர்தல் நடக்கும்.. 542 இடங்கள்ல 272 உறுப்பினர்களோட ஆதரவு யாருக்கு இருக்குதோ அவர்தான் பிரதமராக முடியும்.. 
தேர்தலப்போ என்னை பிரதமர் வேட்பாளரா அறிவிக்கணும்..
அவசியமில்ல.. பிரதமருக்குன்னு தனியா தேர்தல் நடக்கல... மக்களவைத் தொகுதிகள்ல போட்டி நடக்கும்.. அதுல பெரும்பாலானவங்க பிரதமரைத் தேர்வு பண்ணுவாங்க..
அந்த எதிர்வீட்டு அங்கிள் எங்க அப்பாகிட்ட, பிரதமர் வேட்பாளர சொல்றதுக்கு கூட தைரியம் இல்லேனு சொல்லிட்டு இருந்தாரு..
பிரதமருக்கு நேரடித் தேர்தல் இல்ல... அப்புடி இல்லாத ஒண்ணுக்கு எதுக்கு வேட்பாளர்..?
ஆமால்ல.. அது சரி அங்கிள்.. 272 உறுப்பினர்கள் ஆதரவு எப்புடி கிடைக்கும்?
பெரிய கட்சில நாம இருக்கணும்... அந்தக் கட்சி உறுப்பினர்கள் நம்ம தலைமைய ஏத்துக்கணும்... அந்தக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கணும்.. இல்லேனா கூட்டணி ஆட்சி... கூட்டணிக்கட்சிகள் நம்ம தலைமைக்கு சரின்னு சொல்லணும். மொத்தத்துல 272 உறுப்பினர்கள நம்ம ஆதரிக்கணும்.. 
பெரிய கட்சினா தேசியக்கட்சியா அங்கிள்..
தேசியக்கட்சிகள்னு சொல்லலாம்.. இப்போதைக்கு ஆறு கட்சிகள தேசியக்கட்சிகள்னு தேர்தல் ஆணையம் அங்கீகரிச்சுருக்கு.. காங்கிரஸ், பாரதீய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்), பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி. தேசிய மக்கள் கட்சி... அதோட 55 மாநிலக் கட்சிகள் இருக்கு.. 
இந்த அங்கீகாரத்த தேரதல் ஆணையம்தான் தீர்மானிக்கும்.. இல்லையா அங்கிள்.
ஆமா.. கட்சியோட பதிவும் அங்கதான் பண்ணனும்.. செலவுக் கணக்கெல்லாம் குடுக்கணும்.. 
நாம பேசுனத வெச்சு வரிசைப்படுத்தி கட்டுரையா மாத்திடுறேன்.. மானே, தேனே பொன்மானேலாம் நானே போட்டுக்குறேன்.. நன்றி அங்கிள்..