tamilnadu

img

பயணம் முக்கியம்: உயிர் அதைவிட முக்கியம்!

தொகுப்பு: ஸ்ரீராமுலு

“நில்! கவனி!! செல்!!! இது சாலைக்கு் மட்டுமல்ல வாழ்க்கைக்குமானது” சாலை பயணத்தில் பாதுகாப்பு என்பது நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும். சாலை விதிகளை முறையாக கடைப் பிடிக்க வேண்டியதன் அவசியத்தை சிறு வயது முதல் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். அத்துடன் நாமும் அதன்படி நடந்து இளம் தலைமுறைக்கு உதாரண மாகவும் வழிகாட்டியாகவும் திகழ வேண்டும். சாலை வசதி மேம்பாடு பொருளாதார முன்னேற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவி யது. அதே நேரத்தில், சாலை விபத்து களால் ஏற்படும் உயிரிழப்புகளும் சேதங்க ளும் நாட்டிற்கும் வீட்டிற்கும் பெரும் இழப்புகளை ஏற்படுத்துகிறது.

முன்னோடி தமிழகம்...
நெடுஞ்சாலைகள், பாலங்களில் தினசரியும் அவ்வப்போது பயணம் செய்து வரும் நமக்கு அவற்றின் விபரங்கள் முழு மையாக தெரிவதில்லை. குறிப்பாக, விபத்தில்லா பயணத்தை மேற்கொள்வ தற்கு முன்பு நெடுஞ்சாலை துறையின் சாலைகள் மற்றும் பாலங்களின் விப ரங்களை அறிந்து கொண்டு பயணிப்பது மிக மிக அவசியமானதாகும். தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைத் துறைக்கு நெடிய வரலாறு உண்டு. நாடு விடுதலைக்குப் பிறகு 1954 ஆம் ஆண்டில் இருந்தே சாலை உட்கட்டமைப்பில் தமிழ கம் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள சாலைகளின் மொத்த நீளம் 2.61 லட்சம் கிலோ மீட்ட ராகும். நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற துறைகளில் உள்ள சாலைகள் அனைத்தும் இதில் அடங்கும். இவற்றில் 70,556 லட்சம் கிலோ மீட்டர் நீளச்சாலை நெடுஞ்சாலை துறை வசம் உள்ளது. இதனை சாலை மேம்பாடு, புறவழிச் சாலைகள், பல் வழிச் சாலைகள், உயர் மட்ட சாலைகள். சிறு பாலங்கள், ஆற்று பாலங்கள், ரயில்வே பாலங்கள் மற்றும் கீழ் பாலங்கள் என பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை பராமரிக்கிறது. மறுபுறத்தில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 5,134 கிலோ மீட்டர் சாலைகளும் தேசிய நெடுஞ் சாலைத் துறையின் கீழ் 1,472 கிலோ மீட்டர் சாலைகளும் உள்ளன. மாநில நெடுஞ்சாலைகள் துறையின் கீழ் 11,275 கிலோ மீட்டர் நீளச்சாலைகளும், 11,623 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாவட்ட முக்கிய சாலைகளும், 41,052 கிலோ மீட்டர் தூத்திற்கு இதர மாவட்ட சாலைகளும் பயன்பாட்டில் உள்ளன. தமிழ்நாட்டில் தற்போது வரைக்கும் 72 பல் வழிச் சாலை மேம்பாலங்களும், 1,26,38 சிறு பாலங்களும் அமைக்கப் பட்டுள்ளன. இதைத் தவிர பெரிய பாலங் கள் மற்றும் பாலங்கள் 9,179 இடங்களில் கட்டிக் கொடுக்கப் பட்டுள்ளன. மேலும் 136 ரயில்வே மேம்பாலங்கள், 58 ரயில்வே கீழ் பாலங்கள் பாதசாரிகளின் நடைபாதை மேம்பாலங்கள், 12 பாதசாரிகளின் சுரங்கப் பாதை 15 உள்ளன.

ஆபத்தாகும் அதிவேகம்
2019ஆம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்து தொடர்பாக இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கும் புள்ளிவிவரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த ஆண்டில் மட்டும் நாடு முழுக்க 4,49,000 சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் 1,15,133 பேர் உயிரிழந்துவிட்டனர். 4,51361 நபர்கள் காயமடைந்துள்ளனர். தமிழ் நாட்டில் மட்டும் 12.70 விழுக்காடு விபத்துக்கள் நிகழ்ந்திருக்கின்றன. விபத்துகளில் சிக்கி மரணமடைந்த வர்கள் மற்றும் காயமடைந்தவர்க ளில் 25 வயது முதல் 35 வயதுக்குட்பட்டோர் 26 விழுக்காடாக உள்ளது. 18 முதல் 25 வயது மற்றும் 35 முதல் 45 வயதை சேர்ந்தவர்கள் 22 விழுக்காடு என்று அந்த புள்ளிவிவரம் அபாயச் சங்கு ஒலித்திருக்கிறது. 45 முதல் 60 வயது வரை 15 விழுக்காட்டினர் மட்டுமே என்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர் 6 விழுக்காடு என்றும் அந்தப் புள்ளிவிபரம் சுட்டிக் காட்டியிருக்கிறது. குறிப்பாக, மணிக்கு 65 கிலோ மீட்ட ருக்கும் அதிகமான வேகத்தில் செல்லும் வாகனங்கள் 90 விழுக்காடும் 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் பயணித்த வாகனங்கள் 75 விழுக்காடும் விபத்துக்குள்ளாகி இருக்கின்றன. மணிக்கு முப்பது கி.மீ. வேகத்தில் செல்லும் எந்த வேகம் விபத்தில் சிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்திருக்கிறது. இத்தகைய பின்னணியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை “சாலை பாது காப்பு உயிர் பாதுகாப்பு” என்கிற விழிப் புணர்வு கையேடு ஒன்றை வெளிக் கொண்டு வந்திருக்கிறது. போக்குவரத்து பயணங்கள் மனித வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாகி விட்டது. நவீன சாலைகள் பயண நேரத்தை குறைத்து விட்டன. அதே நேரத்தில் அவ சரப் பயணமும், நிதானமற்ற செயலும் ஆபத்தை விளைவிக்கின்றன. இதனை சாலையில் பயணிப்பவர்களுக்கு இன்றள வும் நினைவூட்ட வேண்டியே இருக்கிறது. பாதுகாப்பான பாதையைத் தெரிந்து கொண்டு பயணத்தை சுகமாக மாற்றிக் கொள்ள அரசு வகுத்திருக்கும் வழிமுறை களை பின்பற்றுவது அவசியமாகும்.

தவிர்க்க வேண்டியவை
கைபேசியில் பேசிக் கொண்டே கார், வேன், லாரி, பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்கள் ஓட்டும்போது கவனச் சிதறல் கள் ஏற்படும். சாலையை மறந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு வாக னத்தை ஓட்டுவதும், வாகனத்தை ஓட்டிக் கொண்டே கண்ணாடியை சரி செய்ய முற்படுவதும் விபத்துக்கு முக்கிய கார ணங்களாக அமைவதால் அதை தவிர்ப்பது அவசியமாகும். தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியாமல் இருசக்கர வாகனங்களில் பயணிப்பதே தவறு. இரண்டு பேர் செல்ல வேண்டிய வாகனத்தில் நான்கு ஐந்து பேர் பயணிப்பது முற்றிலும் ஆபத்தானது. இதையும் அறவே தவிர்க்க வேண்டும். சாலையில் வாகனத்தை ஓட்டிச் செல்லும் பொழுது இடது பக்கம் செல்லாமல் வலது பக்கம் செல்ல செல்ல முற்படக் கூடாது. கனமழை, மூடுபனி, புயல் நேரங்களில் வேகமாக பயணிப்பதை தவிர்க்க வேண்டும். போக்குவரத்து சமிக்ஞை களை கடைப்பிடிக்காமல் சிவப்பு விளக்கு எரியும் போது சாலையை கடப்பதும், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் இருக்கை பட்டையை அணியாமல் செல்வதும் மிகவும் ஆபத்தானது.  பேருந்தில் இருந்து இறங்கியவுடன் பின் பக்கத்திலோ அல்லது முன் பக்கத்திலோ ஒருபோதும் சாலையை கடக்க முயற்சிக்கக் கூடாது. அதிலும் குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். சாலை விபத்தை தவிர்ப்பதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஆங்காங்கே வைத்திருக்கும் தகவல் அறிவிப்பு, விளம்பர பலகைகள், குறியீடுகள், எச்சரிக்கை விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். சாலையில் ஓடுதளத்தில் வெள்ளை, மஞ்சள், சிவப்பு வர்ணத்தில் ஒளிரும் தன்மையில் அமைக்கப்பட்டு இருக்கும் எச்சரிக்கை கோடுகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். சாலையில் ஏற்படும் பெரும்பாலான விபத்துகளுக்கு முக்கியக் காரணம் சாலை விதிகளை மீறுவதுதான். சாலை விதிகளை ஒவ்வொருவரும் பொறுப்புடன் கடைப்பிடித்தால் விபத்தை பெருமளவு குறைக்க முடியும்.

இதனை உணர்ந்து சாலை பாதுகாப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டியது நாம் அனைவரின் கடமையாகும். நான்கு வழிச் சாலைகளில் குறிப்பாக அதிகாலையில் பயணிக்கும் போது இலகுரக வாகன ஓட்டிகள் மிகுந்த கவ னத்துடன் வாகனத்தை இயக்க வேண்டும். நேரான சாலையில் செல்லும் பொழுது ஓட்டுநரின் கவனம் வாகனத்தை முறையாக ஓட்டுவதில் இருந்து விலகி பிற செயல்களில் ஈடுபடுகிறது. அதுபோன்ற நேரங்களில் அதிக வேகமாக முன் செல்லும் வாகனங்களை முந்தி செல்ல முயலும் போது விபத்துக்கள் அதிகரிக்கின்றன. சில நேரங்களில், பிரேக் டவுன் ஆன கனரக வாகனங்கள், கார் சாலையிலே நிறுத்துவதால் விபத்துக்கான அபா யத்தை ஏற்படுத்துகிறது. மேலும், கனரக வாகனங்களை சாலையில் நிறுத்தாமல் அதற்குரிய நிறுத்தம் இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும்.  ஒருவேளை பழுதாகி சாலையில் நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் முறையான பாதுகாப்பு நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அதுவும் விபத்தை ஏற்படுத்தும். நான்கு வழிச்சாலைகளில் பெரும்பாலும் விபத்துக்கள் இந்த வகையில் தான் நிகழ் கின்றன. சாலையை கடக்கும் போது செல்பேசியில் பேசு வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சாலையில் சாகசம் காட்டுவதை தவிர்த்து,  சாலை விதிகளை கட்டாயம் மதிக்க வேண்டும். 

பொன்னான நேரம்...
நேர் சாலை தானே என்ற அலட்சியம் வேகத்தை அதிகரிக் கிறது. இது போன்ற ஆபத்தான பயணம் அதிகப்படியான விபத்துக்களை ஏற்படுத்துகின்றன. ஒரு விபத்து ஏற்பட்டால் அதில் பாதிக்கப்பட்டவருக்கு முதல் 60 நிமிடங்கள் பொன்னான நேரமாகும். அந்த நேரத்தில் உரிய மருத்துவ சிகிச்சை அளித்தால் பாதிக்கப்பட்ட வரின் உயிரை எளிதில் காப்பாற்ற முடியும். அந்த பொன்னான நேரத்தில் செய்யப் படும் முதல் உதவி விபத்துக்குள்ளானவரின் காயத்தின் தீவிரத்தை குறைக்க உதவுகிறது.  இது மட்டுமல்லாமல் உயிரையும் காப்பாற்றுகிறது என்பதை நாம் நினைவில் கொண்டு தீயணைப்பு, காவல் துறை, அவசர ஊர்திகள் முன்பும் பின்பும் வாகனம் நிறுத்து வதையும் அதி வேகமாக முந்திச் செல்வத்தையும் தவிர்க்க வேண்டும்.  அவசரகால உதவிக்கு 108 எண்ணை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸை அழைக்க வேண்டும். 100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விபத்து நடந்த இடம் பற்றி விபரங்களை காவல்துறையிடம் தெரிவிக்கலாம். தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டால் 1013 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும். சாலை விதிகளை பின்பற்றுவோம். விபத்துல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்றும் நெடுஞ்சாலை துறை தெரிவித்திருக்கிறது. பாதுகாப்பான இனிய பயணத்திற்கு நிதானத்தை கடைப் பிடிப்போம்; சாலை விதிகளை மதிப்போம்; உன்னதமான உயிர்களை காப்போம்!

;