இன்று முதல் ரயில் கட்டணம் உயர்வு
புதுதில்லி, ஜூன் 30 - நாடு முழுவதும், இன்று (ஜூலை 1) முதல் ரயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி 500 முதல் 1500 கி.மீ. வரையிலான தூரத்திற்கு ரூ. 5-ம், 1501 முதல் 2500 கி.மீ வரையிலான தூரத்திற்கு ரூ. 10-ம், 2501 முதல் 3000 கி.மீ வரையிலான தூரத்திற்கு ரூ. 15-ம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புறநகர் ரயில் கட்டணம் மற்றும் சீசன் டிக்கெட்டுக் கான கட்டணங்களில் மாற்றமில்லை. தொலை தூர ரயில்களில் சாதாரண வகுப்புகளில் 500 கி.மீ. வரை மட்டும் கட்டண உயர்வு இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உள்ளாட்சி நியமன பதவி மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஜூன் 30 - மாநகராட்சி, நகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் நியமன பதவி பெற, ஜூலை 1 முதல் விண்ணப்பிக்க லாம். இதற்கான வேட்புமனுக்களை tnurbantree.tn.gov.in / whatsnew-ல் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க லாம். வேட்புமனுக்களை சமர்ப்பிக்க ஜூலை 17 கடைசி நாள் ஆகும்.