tamilnadu

img

வீடு வீடாக சென்று பெற்றோரை ஊக்கப்படுத்திய அங்கன்வாடி பணியாளர்

தஞ்சாவூர், அக்.5-  தஞ்சாவூர் அரசுப் பள்ளிகளில் மாண வர்கள் சேர்க்கையை முன்னிட்டு, வீடு  வீடாக அங்கன்வாடி பணியாளர் சென்று  பெற்றோர்களை ஊக்கப்படுத்தி, மாணவர்களை பள்ளியில் சேர்த்தனர். விஜயதசமியன்று கல்வி, கலைகள் என எதைத் தொடங்கினாலும் வெற்றி யுடன் முடியும் என்பது நம்பிக்கை. இதை யடுத்து பெற்றோர் பலர், தங்கள் குழந்  தைகளை விஜயதசமி தினத்தில் பள்ளி களில் சேர்ப்பது வழக்கம். கோவில் களில் ‘வித்யாரம்பம்’ நடைபெறும்.   இந்நிலையில், அரசு தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மையத்தில், ஜூன்  மாத அட்மிஷனின் போது, மாதக் குறைவு  காரணமாக சேர்க்காமல் விடுபட்ட மாணவர்களை, விஜயதசமியன்று சேர்க்க பள்ளிக் கல்வித்துறை உத்தர விட்டது. அதன்படி, புதனன்று தஞ்சா வூர் கீழவாசல், காவடிக்கார தெருவில் உள்ள அங்கன்வாடி மைய பணியா ளர்கள் பிரியதர்ஷினி, உதவியாளர் லோகநாயகி இருவரும் வீடு வீடாக  சென்று பெற்றோர்களிடம் பேசி, மாண வர்களை அங்கன்வாடி மையத்தில் சேர்த்தனர். மேலும் அவர்களுக்கு சிலேட்டு குச்சி, நோட்டு, இனிப்புகள் உள்ளிட்டவற்றை வழங்கினர். சேர்க் கப்பட்ட மாணவர்களை அரிசியில் அ,ஆ., எழுத வைத்தனர். இதுகுறித்து பிரியதர்ஷினி கூறு கையில், எங்கள் பகுதியில் கூலித் தொழி லாளர்கள்தான் அதிகம். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாணவர் களுக்கு உரிய வயது வந்த பிறகு பள்ளியில் சேர்க்க வைத்துள்ளோம். அரசு வழங்கும் திட்டத்தினை எடுத்து ரைத்த நிலையில், ஒரே நாளில் 4 மாண வர்கள் சேர்ந்துள்ளனர் என்றார்.

;