tamilnadu

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி முக்கிய செய்திகள்

நெல்லையில் 180 பேருக்கு கொரோனா  

திருநெல்வேலி, ஜூலை 17- நெல்லை மாவட்டத்தில் வியாழக்கிழ மை வரை 2,228 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,069 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள னர். 1,148 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந் நிலையில் வெள்ளிக்கிழமை மாவட்டத் தில் 180 பேருக்கு கொரோனா உறுதியா னதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,408-ஆக உயர்ந்துள்ளது. 

மகளை பாலியல் வன்கொடுமை செய்தவர் மீது போக்ஸோ வழக்கு  

தூத்துக்குடி, ஜூலை 17- தூத்துக்குடி மாவட்டம், விளாத்தி குளம் அருகே புதூர் சென்னம்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (45). இவருக்கு 2 மனைவிகள், இருவரும் சகோதரிகள். இவர்கள் இருவருக்கும் ஆளுக்கொரு மகள் உள்ளனர். கருப்பசாமி தற்போது புதூரில் குடும்பத்துடன் வசித்து வரு கிறார். இந்நிலையில், 2வது மனைவியின் 14 வயது மகளுக்கு சில தினங்களுக்கு முன் திடீரென வயிற்று வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து புதூர் அரசு மருத்துமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக் காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது சிறுமி ஆறு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதைய டுத்து சிறுமியின் தாய் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். விசாரணையில், கருப்ப சாமி குடிபோதையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. மேலும் தொடர்ந்து மிரட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை தேடி வருகின்றனர்.

கோவில்பட்டியில் வங்கி ஊழியர் உட்பட 26 பேருக்கு கொரோனா 

தூத்துக்குடி, ஜூலை 17- தூத்துக்குடி மாவட்டத்தில் ஆரம்பத்தில் குறை வாக இருந்த கொரோனா தொற்று தற்போது நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்க ளுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளியன்று கோவில்பட்டியில் இ.எஸ்.ஐ. மருந்தகம் மற்றும் தனியார் வங்கி ஊழியர் உள்பட 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இ.எஸ்.ஐ. மருந்தகம் மற்றும் ஹெடிஎப்சி வங்கி ஆகியவை 3 நாள்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் தற்போது காவல்துறை யினர் 53 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி அரசு பாலி டெக்னிக் கல்லூரியில் 8 காவல்துறையினர் உட்பட பொதுமக்கள் 160 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்முகாமை மாவட்ட எஸ்பி., ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

 

;