மதுரை, ஜூன் 27- மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மதுரை மாநகராட்சி பகுதி, பரவை பேரூராட்சி, கிழக்கு, மேற்கு மற்றும் திருப்ப ரங்குன்றம் பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத் தப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் தேனி, போடி, சின்னமனூர், கம்பம், கூடலூர் ஆகிய ஐந்து நக ராட்சிப் பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத் தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை, தேனியில் மின்கட்ட ணம் செலுத்த கால அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. தாழ்வழுத்த மின்நுகர்வோர் கட்டணத்தை ஜூலை மாதம் 15-ஆம் தேதி வரை தாமத செலுத்தலாம் எனக் கூறியுள்ளது.