tamilnadu

img

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: 2 ஆம் ஆண்டு நினைவு தினம்

நாங்கள் என்ன தேச துரோகியா? - ஸ்னோலின் தாயார் கேள்வி

சிபிஎம் அஞ்சலி

தூத்துக்குடி, மே 22- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் 2  ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சிபிஎம் தூத்துக்குடி மாவட் டக்குழு சார்பில் அஞ்சலி செலுத்தப் பட்டது. தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ஸ்டெர் லைட் ஆலையை நிரந்தரமாக மூட  வலியுறுத்தி பொதுமக்கள் அனைவ ரும் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சென்ற போது காவல்துறை நடத்திய துப்பாக் கிச்சூடு, தடியடியால் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆயிரக்க ணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதை யொட்டி போராட்டத்தில் உயிரி ழந்தவர்களுக்கு தூத்துக்குடியின் பல்வேறு இடங்களில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்டெர் லைட் போராட்டத்தில் உயிரிழந்த வர்களின் வீடுகளில் அவர்களது உற வினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். சிபிஎம் தூத்துக்குடி மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நினைவு அஞ்சலி கூட்டத்தில் மாவட்டச் செய லாளர் கே.எஸ்.அர்ச்சுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரசல், பேச்சிமுத்து, மாநகர் செயலாளர் தா.ராஜா, புறநகர் செயலாளர் பா. ராஜா, ஒன்றியச் செயலாளர் சங்கரன், புவிராஜ், நம்பிராஜன், ரவிச் சந்திரன், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் குமாரவேல், பொன்ராஜ், வாலிபர் சங்க செயலாளர் முத்து, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பூம யில், மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் ஜாய்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாங்கள் என்ன தேச துரோகியா? ஸ்னோலின் தாயார் வேதனை...

ஆதார் அட்டையை போலீஸ் ஸ்டேசனில் காட்டி கல்லறைக்கு போய் அஞ்சலி செலுத்த நாங்கள் என்ன தேச துரோகியா? என்று தமி ழக அரசிற்கு ஸ்னோலின் தாயார் கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தர மாக மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் கல்லூரி மாணவி ஸ்னோலின் உட்பட 13 பேர் உயிரி ழந்தனர். வெள்ளியன்று மாணவி  ஸ்னோலினின் தாயார் வனிதா, மக ளின் கல்லறையில் மாலை அணி வித்து நினைவு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித் தார். அப்போது அவர் கூறுகையில், “கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருந்தே  எங்கள் வீடு, கல்லறை தோட்டம் ஆகிய பகுதிகளை போலீசார் இரவு  பகலாக கண்காணித்து வந்தனர். ஆதார் அட்டையை போலீஸ் ஸ்டேச னில் காட்டிவிட்டு கல்லறைக்கு போய் அஞ்சலி செலுத்த சொன்னார்கள். பெத்த மகளுக்கு அஞ்சலி செலுத்த ஆதார் அட்டையை போலீசார் கேக்கு றாங்க. நாங்கள் என்ன தேச துரோ கியா. துப்பாக்கி சூடு நடந்து 2 ஆண்டு கள் ஆகியும், அதற்கு காரணமான போலீசார் யார் மீதும் இதுவரை நடவ டிக்கை எடுக்கவில்லை. 

இந்த சம்பவம் தொடர்பாக நடக் கும் ஒரு நபர் விசாரணை ஆணைய‌ மும் மவுனமாக இருக்கிறது. என்  மகளை சேர்த்து உயிரிழந்த அப்பாவி மக்களின் உயிருக்கு அர சாங்கம் என்ன சொல்லப் போகிறது”  என்று கண்ணீர் மல்க கேள்வி எழுப்பி னார்.

;