வட்டி, தவணைத்தொகைகளை கேட்டு தனியார் நிதி நிறுவனங்கள் அடாவடி! வாலிபர் சங்கம் புகார்
தேனி, மே 22- தேனியில் தனியார் நகை அடகு நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் வட்டி மற்றும் கடன் தவ ணைகளை செலுத்த வலி யுறுத்தி அடவாடி செய்து வரு வதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மா வட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் புகார் மனு அளி க்கப்பட்டுள்ளது. இது குறித்து தேனி மாவ ட்ட ஆட்சியர் அலுவல கத்தில் இந்திய வாலிபர் சங்கத்தின் தேனி மாவட்டச் செயலாளர் சி.முனீஸ்வரன் , தேனி வட்டாரத் தலைவர் முத்துக்குமார், செய லர் பெத்தீஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜாவிடம் அளித்த மனு விபரம்: தேனியில் உள்ள தனி யார் நகைக் அடகு நிறுவ னங்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்களில் 1,000க்கும் மேற்பட்ட கூலித் தொழிலா ளர்கள் கடன் பெற்றுள்ள னர். பொது முடக்கம் காரண மாக கடந்த 50 நாட்க ளுக்கும் மேல் கூலித் தொழி லாளர்கள் வேலை வாய்ப்பு மற்றும் வருவாயின்றி தவி த்து வரும் நிலையில், வட்டி மற்றும் கடன் தவணைகளை செலுத்துமாறும், அபராத வட்டி விதித்தும் நகை அடகு மற்றும் நுண் நிதி நிறு வனங்கள் கெடுபடி செய்து வருகின்றன. ஏழை கூலித் தொழிலா ளர்கள் நலன் கருதி நகை அடகு மற்றும் நுண் நிதி நிறு வனங்களுக்கு வட்டி மற்றும் கடன் தவணைகளை செலு த்துவதற்கு கால அவகாசம் வழங்கவும், அபராத வட்டி விதிப்பை தடை செய்யவும் மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரி வித்துள்ளனர்.
கேரளாவில் இருந்து வந்த 75 வடமாநிலத் தொழிலாளர்களை தனிமைப்படுத்த உத்தரவு
இராஜபாளையம், மே.22- விருதுநகர் மாவட்டம் சேத்தூர் அருகே அனுமதியின்றி லாரியில் வந்த 75 வடமாநிலத் தொழிலாளர்களை தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ளது. சேத்தூர்- சொக்கநாதன்புத்தூர் விலக்கு பகுதியில் சோத னைச்சாவடி உள்ளது. இங்கு போலீசார் பணியில் இருந்த னர். அப்போது கேரளாவில் இருந்து மேற்குவங்கத்துக்கு சென்று கொண்டிருந்த லாரியை நிறுத்தினர். அதை சோதனை செய்ததில் 75 வடமாநில தொழிலாளர்கள் இருந்தனர். அதில் 45 பேருக்கு மட்டுமே அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருந்தது. மீத முள்ள 30 நபர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த போலீசார், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி, அனைத்து மேற்கு வங்கத் தொழிலாளர்களும் தனியார் கல்லூரியில் தனி மைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றால் தேனியில் முதியவர் சிகிச்சை பலனின்றி மரணம்
தேனி ,மே 22- தேனி அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த , ஓடைப்பட்டியைச் சேர்ந்த 65 முதியவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். தேனி மாவட்டத்தில் கடந்த ஏப்.1-ஆம் தேதி முதல் மே 21-ஆம் தேதி வரை மொத்தம் 96 பேர் கொ ரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதில், ஏற்க னவே போடியைச் சேர்ந்த பெண் உயிரிழந்தார். 50 பேர் குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர்.இந்த நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த 65 வயதுடைய முதியவர் உயிரிழந்தார், இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தேனி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனையில் மொத்தம் 44 பேர் கொரோனா பாதி ப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட் டுக்கு லாரி ஒட்டிச் சென்ற ஓட்டுநர் ஒருவருக்கு ஏற்பட்டு ,பரிசோ தனை முடிவுகள் தாமத மாக அறிவிக்கப்பட்ட நிலை யில் ஓட்டுநர் அப்பகுதி மக்க ளுடன் பொழுது போக்காக தாயம் உள்ளிட்ட விளை யாட்டில் கலந்து கொண்டார் .இதன் மூலம் தொற்று பரவி ஓடைப்பட்டியில் சமூக பரவலானது .ஓடைப்பட்டி யில் மட்டும் 15 பேர் பாதி க்கப்பட்டு தேனி அரசு மரு த்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற நிலையில் ஒரு முதியவர் இறந்து போனார் .இவர் லாரி ஓட்டுனரின் பெரியப்பா ஆவார்.
கோடை உழவு ஏன்? அதிகாரி விளக்கம்
தஞ்சாவூர், மே 21- தஞ்சை பேராவூரணி வட்டாரத்தில் பஞ்ச நதிபுரம், செங்கமங்கலம் மற்றும் களத்தூர் கிராமங்களில் தமிழ்நாடு நிலைக்கதக்க மானாவாரி வளர்ச்சி இயக்கம் செயல் படுத்த தேர்வு செய்யப்பட்டு, அந்த கிராமங்க ளில் கடந்த மூன்று ஆண்டுகளாக பயிரி டத்தக்க தரிசு என்ற வகைபாட்டில் இருந்த 100 ஹெக்டேர் நிலத்தினை நடப்பாண்டில் பயிர் சாகுபடிக்கு கொண்டு வர திட்டமிடப் பட்டுள்ளது. தற்சமயம் மேற்கண்ட 3 கிராமங்களில் உள்ள விவசாயிகள் அனைவரும் கோடை உழவு பணி கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். “கோடை உழவு செய்தால் கோடி நன்மை உண்டு” என்ற உலகச்சொல் உண்டு. தற்சமயம் பேராவூரணி வட்டாரத்தில் பர வலாக பெய்து வரும் கோடை மழையினை பயன்படுத்தி இவ்வட்டார விவசாயிகள் அனைவரும் கோடை உழவு செய்வது மிகவும் அவசியமாகும். முதலில் வயலை இரும்பு கலப்பை கொண்டோ (அல்லது) டிராக்டர் கொண்டோ குறுக்கும், நெடுக்குமாக ஆழமாக புழுதி பட உழவு செய்ய வேண்டும். இவ்வாறு கோ டையில் உழவு மேற்கொள்வதால், புல் - பூண்டு கள் வேர் அறுந்து கருகி விடுகின்றன. கடினத் தன்மையுள்ள மண் கட்டிகள் உடைந்து மண் பொலபொலப்புத் தன்மைஅடைகிறது.
பயிர் பருவ காலங்களில் சில வகை பூச்சிகளின் புழுக்கள் மண்ணுக்குள் சென்று கூண்டுப் புழுவாக மாறி பேரிச்சங்கொட்டை போன்ற உருவத்தில் மண்ணுக்கடியில் வளர்ந்து கொண்டிருக்கும். கோடை உழவு செய்வதன் மூலம் இவ்வகை கூண்டுப்புழுக் கள் மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டு அவை பறவைகளால் பிடித்து தின்று அழிக் கப்படுகிறது. இதன் மூலம் அடுத்த பயிர் சாகு படியின் போது பூச்சிகளின் தாக்குதல் வெகு வாக குறைகிறது. களைச்செடிகள் முற்றிலும் அழிக்கப்படு கின்றன. மண்ணில் நீர் பிடிப்புத் தன்மை பெருகும். மண்ணின் பௌதீக தன்மை மேம்படுகிறது. நாற்றங்கால் மற்றும் நடவு வயல் தயாரிப்பு மிகவும் எளிதாகிறது. மண் பொலபொலப்புத் தன்மை பெறுவதால் அடுத்த பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பயிருக்கு நாம் இடும் உரம் சமச்சீராக கிடைத்து வேர் வளர்ச்சி தூண்டப் படுவது டன், பயிர் செழித்து வளர்கிறது. மண்ணில் அங்கக உயிரினயங்களின் பெருக்கம் பல மடங்கு பெருகி மண் நயம் மேம்படுகிறது. இதனால் மகசூல் கூடுதலாக கிடைக்கிறது என பேராவூரணி வேளாண் உதவி இயக்குநர் எஸ்.மாலதி எனத் தெரிவித்துள்ளார்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ரயிலில் அனுப்பி வைப்பு
மதுரை, மே 22- இராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்ட த்தில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கினால் பிழைக்க வழி இல்லாமலும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர். அவர்களை இராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகமும் தெற்கு ரயில்வேயும் இணைந்து இராமநாதபுரம் மற்றும் மதுரை ரயில் நிலையத்திலிருந்து பீகார் மாநிலத்தில் உள்ள சுபால் என்ற இட த்திற்கு வியாழனன்று அனுப்பி வைத்தனர். இந்த சிறப்பு ரயில் மதுரை, அரா, ப்ருனி மற்றும் ககாரிய ஆகிய ரயில் நிலையங்க ளில் நின்று செல்லும். வியாழனன்று மதியம் 01.00 மணிக்கு இராமநாதபுரம் ரயில் நிலை யத்திலிருந்து புறப்பட்டது, மாலை 03.45 மணிக்கு மதுரை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. சனிக்கிழமை அன்று மாலை 05.15 சுபால் ரயில் நிலையம் சென்று சேரு கிறது. இந்த ரயிலில் இராமநாதபுரத்தில் 456 , மதுரையில் 1144 புலம்பெயர்ந்த தொழிலா ளர்கள், மற்றும் மாணவர்கள் பயணிக்கி றார்கள். ரயிலில் பயணிகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழ ங்கப்பட்டது. சிறப்பு ரயிலில் பயணித்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினய் மற்றும் ரயில்வே அதிகாரிகள் லலித் மனசுகானி, கூடு தல் கோட்டமேலாளர், வி. பிரசன்னா, மூத்த கோட்ட வணிக மேலாளர், ம. பரத், கோட்ட வணிக மேலாளர் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க அறிவுறுத்தல்
தஞ்சாவூர், மே 22- கோடை காலத்தில் தஞ்சை மாவட்டத்தில், பொது மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிதண்ணீர் வழங்க வேண்டும். ஊரகம், நகர்ப்புறம் மற்றும் பேரூராட்சிப் பகுதியில் தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்.குடிநீர் ஆதாரங்களில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக சரிபார்த்து குறைகளை நிவர்த்திசெய்ய வேண்டும். தடை யில்லா மின்சாரம் வழங்கி அதன் மூலம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் மின்வாரிய துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்டவை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு தஞ்சாவூர் ஆட்சியர் ம.கோவிந்தராவ் அறிவுறுத்தி உள்ளார்.