tamilnadu

img

தீக்கதிர் மதுரை மண்டலச் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் கிளை அமைப்பு

இராமநாதபுரம்:
இராமநாதபுரம் மாவட்டம் கும்பரம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகள் கிளைஅமைக்கப்பட்டது. கருப்பையா,  மாவட்டச் செயலாளர் இராஜ் குமார், ஊராட்சித்தலைவர் துளசி தேவி, கல்யாணசுந்தரம், நிலர் வேணி, அரிஹரசுதன் ஆகியோர்அமைப்புக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கிளைத் தலைவராக முத்துச்சாமி, துணைத்தலைவராக ஜெயலட்சுமி, செயலாளராக கருப்பையா,துணைச் செயலாளராக பானுமதி, பொருளாளராக மூக்குபொரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மதுரை
மதுரை சோலையழகுபுரம் பகுதியில்மாற்றுத்திறனாளிகள் சங்க புதிய கிளைஅமைக்கபட்டது. கிளைத் தலைவர் முத்துபாண்டி, செயலாளர் ராஜன், பொருளாளர் மாணிக்கம், நிர்வாகிகள் ஜோதி, காசி ஆகியோர் தேர்வுசெய்யபட்டனர். அமைப்புக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் டி. நாகராஜ், பொருளாளர் மாரியப் பன், உதவித் தலைவர்  தங்கவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

                      **************

டாஸ்மாக் காவலாளி அடித்துக் கொலை

மதுரை:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேஉள்ள செம்மினிபட்டியில் மதுக்கடை சுவரில் இரவு துளையிட்டு மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்தக் கடையில் இரண்டு ஆண்டுகளாக காவலாளியாக வேலைபார்த்து வந்த கச்சைகட்டியைச் சேர்ந்த சந்தனம் மகன் கணேசனை காணவில்லை. (45). இது குறித்துஅவரது மனைவி தமிழரசி தனது கணவரை காணவில்லை என வாடிப்பட்டி காவல்நிலையத்தில் திங்களன்று புகார் அளித்தார்.இந்தநிலையில் கணேசன் குட்லாடம்பட்டி செல்லும் வழியில் உள்ள கிணற்றில்பிணமாக மிதந்துள்ளார். அவர் அடித்துகொலை செய்யப்பட்டதாக உறவினர்கள்தெரிவிக்கின்றனர். இறந்த கணேசன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும். உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அதுவரை அவரது உடலை வாங்கமாட்டோம்என அவரது உறவினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினருமான முருகேசன் திங்களன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

                      **************

சிவகாசியில் பால் வியாபாரி கொலை

சிவகாசி:
சிவகாசியில் திங்கள்கிழமை அதிகாலை பால் வியாபாரி ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி வெம்பக்கோட்டை சாலையில் உள்ள ராணி அண்ணா காலனியைச் சேர்ந்தவர் முனியசாமி (53). இவர் சுமார் 20-க்கும் மேற்பட்டமாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் திங்கள்கிழமை அதிகாலை பால் கறக்கச் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். அப்பகுதி வழியே சென்ற மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சிவகாசிநகர் காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர். சம்பவ இடத்தை விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பெருமாள், சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரபாகரன் ஆகியோர் பார் வையிட்டனர். இதுகுறித்து சிவகாசி நகர்காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துவிசாரணை செய்து வருகிறார்கள்.

                      **************

மாதர் சங்க கிளை அமைப்பு

மதுரை:
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மதுரை அரசரடி, மேலப் பொன்னகரம் பகுதிகளில் புதிய கிளைகள் அமைக்கப்பட்டன. அரசரடி பகுதிக்குழு சார்பில் மகபூப்பாளையம் பகுதியில் இரண்டு கிளைகள் அமைக்கப்பட்டன  தியாகி லீலாவதிபெயரில் அமைக்கப்பட்ட  மாதர் சங்க கிளைக்கு தலைவர்-ராணி, துணைத் தலைவர்- டயானா செல்வி, செயலாளர்- ஆக்னஸ், துணைச் செயலாளர்- நூர் ஜஹான், பொருளாளர்- ஜானகி.  ஜானகியம்மாள் பெயரில் அமைக்கப்பட்ட கிளைக்கு தலைவர்- ஷாகிரா,  துணைத் தலைவர்- ஷம்ஷத், செயலாளர்- மல்லிகா, துணைச் செயலாளர்- ஜெகனாரா பொருளாளர்- பானு,  பேகம். மேலப்பொன்னகரம் பகுதிக் குழுவில் அமைக்கப்பட்ட கிளைக்கு தலைவர்-கௌசல்யா, செயலாளர்-ஆனந்தி, பொருளாளர்-விஜயலட்சுமி  துணைச் செயலாளர்- பாண்டிப்ரியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்கிளை அமைப்புக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் கே.ராஜேஸ்வரி, செயலாளர் ஆர்.சசிகலா, துணைச் செயலாளர் மல்லிகா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ப்ரீதி, ஜென்னி மற்றும் பசும்பொன்,பிரபாவதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

;